தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தலில் இடங்கள் கிடைக்காவிட்டாலும் சிபிஎம் மக்களுக்கான போராட்டத்தைத் தொடரும்

5 Jun 2026, 9:09 pm
தேர்தலில் இடங்கள் கிடைக்காவிட்டாலும் சிபிஎம் மக்களுக்கான போராட்டத்தைத் தொடரும்

தேர்தலில் இடங்கள் கிடைக்காவிட்டாலும் சிபிஎம் மக்களுக்கான போராட்டத்தைத் தொடரும்

அகர்தலா திரிபுராவில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் பூஜ்ஜியமாக வீழும் என்று அம்மாநில பாஜக முதலமைச்சர் மாணிக் சாஹா அண்மையில் கூச்சலிட்டார்.

இந்நிலையில், தேர்தலில் இடங்கள் கிடைக்காவிட்டாலும் திரிபுராவில் மக்க ளுக்கான போராட்டத்தைத் தொடரும் என சிபிஎம் மூத்த தலைவர் மாணிக் சர்க்கார், முத லமைச்சர் மாணிக் சாஹாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தேர்தல் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும், சிபிஎம் மக்களுக்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெ டுக்கும்.

மக்களின் வாக்குரிமை பறிக்கப் படும் (எஸ்ஐஆர்) பட்சத்தில், சிபிஎம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல்போவது உள்ளிட்ட எந்தவொரு முடிவும் சாத்தியம்தான்.

அதேநேரம், மக்கள் எவ்வித அச்சமோ அல்லது தடையோ இன்றி தங்களது வாக்குரிமையைச் செலுத்தும் வகையில், சுதந்திரமான, நியாய மான மற்றும் ஜனநாயகச் சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால், மக்களின் எதிர்காலத் தீர்ப்பு என்ன என்பதை நாடே பார்க்கும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்பு அதிகாரத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதைப் பொறுத்து, பொது நலன், ஜன நாயக விழுமியங்கள், அரசியலமைப்பு உரிமை கள் மீதான சிபிஎம் -இன் அர்ப்பணிப்பு மாறுவ தில்லை.

சட்டமன்றத்தில் கட்சியின் பிரதிநிதித் துவம் குறைந்தாலும் கூட, சிபிஎம் போராட்டக் களத்தில் இருந்து பின்வாங்காது.

சாமானிய மக்களின் உரிமைகள், வாழ்வாதாரம், நலன் சார்ந்த இயக்கங்களைத் தொடர்ந்து வழி நடத்தும். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம் வரும் நாட்களில் கூடுதல் உறுதியுடன் தொடரும்.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ள எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையான அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன.

ஜனநாயக அமைப்புகளில் தங்களுக்குச் சாதக மாகச் செல்வாக்கு செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஜனநாயக இயக்கங்களை வலுப்படுத்தவும், குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நாடு முழுவதும் ஜனநாயக விழுமியங்களைக் காப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

தேர்தல் வெற்றிகளைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களின் நலன்களைப் பாது காப்பதில் சிபிஎம் எப்போதும் உறுதியாக இருக்கும்” என்று உரக்கக் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.