திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சனை தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு சிபிஎம் வரவேற்பு
7 Jun 2026, 9:06 pm

திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சனை தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு சிபிஎம் வரவேற்பு

சென்னை, ஜூன் 7- திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சனை யில் தவெக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.

இதுதொடர்பான வழக்கு ஜூன் 22ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றும் பிரச்சனையில் முந்தைய நடைமுறையே தொடரும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் சனியன்று தெளிவுபடுத்தி னார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்துக்கு இடம் கொடுக்காமல் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் குறித்து உறுதியான நிலையை அரசு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.