தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வரவேற்பு!

12 Jun 2026, 9:07 pm
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வரவேற்பு!

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வரவேற்பு!

புதுதில்லி, ஜூன்.12 - சுதந்திர ஊடகமான ‘நியூஸ்கிளிக்’ (NewsClick) இணைய இதழ் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா ஆகியோருக்கு எதிராக தில்லி காவல்துறை யின் பொருளாதாரக் குற்றப்பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையையும், அதைத் தொடர்ந்து அமலாக்க இயக்குந ரகம் தொடர்ந்த வழக்கையும் ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக அரசு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான ஒரு கடுமையான எச்சரிக்கையாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டங்களை அச்சமின்றி வெளியிட்டதால் தாக்குதல்

நாட்டின் பெரும்பாலான ஊடக நிறு வனங்கள் கார்ப்பரேட்டுகள் மற்றும் அர சியல் அதிகார வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவை செய்து வரும் சூழலில், அதிகாரத்தில் இருப்பவர்களையும் அவர்களுக்கு ஆதர வளிக்கும் கார்ப்பரேட்டுகளையும் கேள்விக் குள்ளாக்கும் ‘நியூஸ்கிளிக்’ போன்ற ஊடகங்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று அரசியல் தலைமைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் போராட்டங்கள் குறித்த அவர்களின் அச்சமற்ற செய்தி வெளியீடுகளே, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள அந்தப் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குக் காரணமாக அமைந்தன.

ஓராண்டு காலம் நடைபெற்ற வர லாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்ட த்தை செய்திகள், பகுப்பாய்வுகள் மற்றும் காணொலிகள் மூலம் தொடர்ந்து முன்னெடுத்தபோது, ‘நியூஸ்கிளிக்’ பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு ஒரு பெரும் உறுத்தலாக மாறியது. இது அந்த ஊடகத் தளம் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதுடன், பிரபீர் புர்காயஸ்தா மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (உபா) என்னும் கடுமையான சட்டத்தைப் பிரயோகித்து நீண்ட காலம் சிறையில் அடைப்பதற்கும் வழிவகுத்தது என்று சிபிஎம் சாடியுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்திற்கு வெற்றி

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அமைப்புகள் ‘நியூஸ்கிளிக்’ மற்றும் புர்கா யஸ்தா மீது மேற்கொண்ட நடவடிக்கை கள், விமர்சனப் பூர்வமான இதழியல் செயல்பாடுகளைக் குறிவைப்பதற்கும், மாற்றுக்கருத்துகளை ஒடுக்குவதற்குமான ஒரு சதித்திட்டம் என்பது ஆரம்பத்தி லிருந்தே தெளிவாக இருந்தது. எனவே, இந்தத் தீர்ப்பு பத்திரிகை சுதந்திரத்திற்கும் குடிமக்களின் ஜனநாயக உரிமை களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனப் படுத்தியுள்ளது.

வழக்குகளை ரத்து செய்க!

‘நியூஸ்கிளிக்’ மீதான அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கு “சட்ட நடைமுறை யின் அப்பட்டமான துஷ்பிரயோகம்” என்று தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ‘நியூஸ்கிளிக்’ மற்றும் பிரபீர் புர்காயஸ்தா மீது ஒன்றிய அரசும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள ஏஜென்சி களும் சுமத்தியுள்ள உபா உள்ளிட்ட மற்ற அனைத்து வழக்குகளையும் உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு ஒன்றிய அரசை மிக வலுவாக வலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.