ஆட்சிக்கு வந்ததால் எதையும் செய்யலாம் என கருத வேண்டாம் சிபிஎம் எச்சரிக்கை
12 May 2026, 8:46 pm
<p><strong>ஆட்சிக்கு வந்ததால் எதையும் செய்யலாம் என கருத வேண்டாம் சிபிஎம் எச்சரிக்கை </strong></p><p> கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்பதற்காக, அமைப்பையும் சட்டத்தையும் காற்றில் பறக்கவிடக் கூடாது என்று சிபிஎம் கண்ணூர் மாவட்டச் செயலாளர் கே.கே. ராகேஷ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மாவட்டக் காவல் கூட்டு றவு சங்கத்தில் நியமனம் செய்வதற்கான தேர்வை கேஎஸ்யு உறுப்பினர்கள் சீர் குலைத்தனர். அந்தக் குழுவினர் செய லாளரையும் தேர்வு நிர்வாகிகளையும் தாக்கி, வினாத்தாளைக் கிழித்தனர். அர சியல் தலைமையும் இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு உதவு கிறது. விதிகளின்படி செய்தித்தாள் விளம் பரம் கொடுத்து, தகுதியுள்ள அனைத்து தேர்வர்களுக்கும் நுழைவுச் சீட்டுகளை அனுப்பி, கூட்டுறவுத் துறையின் அனு மதியுடன் ஒரு முகமையால் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. நுழைவுச் சீட்டு இல்லா தவர்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது தான், கேஎஸ்யு உறுப்பினர்கள் கூடி ரகளை செய்தனர். ஐக்கிய ஜன நாயக முன்னணியின் (யுடிஎப்) இட மாற்றப் பட்டியலுக்கு எதிராக ஊழி யர்கள் போராட்டம் நடத்திக் கொண்டி ருந்த நேரத்தில், இந்த ஆட்சேர்ப்புத் தேர்வு திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது. இதற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று ராகேஷ் தெரிவித்துள்ளார்.</p>
