சிபிஎம் வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட குழு நிதியளிப்பு பேரவை கூட்டம்
5 Apr 2026, 6:26 pm
<p>சிபிஎம் வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட குழு நிதியளிப்பு பேரவை கூட்டம் வேலூரில் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி தலைமை தாங்கினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின் அவரிடம் மூன்றாவது தவணை நிதி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன் பி.காத்தவராயன் கே.சாமிநாதன் எஸ்.பரசுராமன் கே.ஜே.சீனிவாசன் செ.ஏகலைவன், இடைக்கமிட்டி செயலாளர்கள் கே.பாண்டுரங்கன் டி.முரளி ஆர்.சுடரொளியன் வி.குபேந்திரன் சி.சரவணன், எஸ்.காமராஜ் மற்றும் மாவட்டக்குழு, தாலுகாகுழு உறுப்பினர்கள் வர்க்க வெகுஜன அரங்க மற்றும் கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.</p>
