தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திடுக!

19 May 2026, 10:12 pm
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திடுக!

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திடுக!

ஒன்றிய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், மே 19 - பின்னலாடை மற்றும் விசைத் தறி ஜவுளித் தொழில்களை நெருக் கடிக்குள் தள்ளியிருக்கும் பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்து வதற்கு ஒன்றிய அரசு நேரடியாக தலை யிட்டு தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் திங்களன்று மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.பவித்ராதேவி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: ஜவுளி தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் பருத்தி நூல் விலை சமீபத்தில் கிலோவுக்கு ரூ.20 அதிகரித்துள் ளது.

கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் கிலோவுக்கு ரூ.61 வீதம் அதிகரித்துள்ளது.

இதனால் பின்ன லாடை மற்றும் விசைத்தறி ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. இந்த நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, ஒன்றிய அரசு பின் பற்றி வரும் தாராளமய கொள்கை காரணமாக ஜவுளி தொழில் மூலப் பொருள்கள் மற்றும் உப பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கொரோனா பொது முடக்க காலத்தில் நெருக்கடியை சந்தித்த ஜவுளி தொழில், உக்ரைன் ரஷ்யா போர், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் சந்தைகள் நெருக்கடியில் சிக்கி மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 50 சதவிகித வரி விதிப்பு, மேற்கு ஆசியாவில் ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் படைகள் சர்வதேச சட்டங்க ளை மதிக்காமல் தொடங்கிய போர் என அடுத்தடுத்து பல்வேறு சூழல்கள் காரணமாக ஜவுளித் தொழில் நெருக்கடிகளில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டு உள்நாட்டு தொழில்களை பாதுகாப்பதற்கு பொருத்தமான கொள்கைகள் எதையும் ஒன்றிய மோடி அரசு மேற்கொள்ளவில்லை.

தற்போது உள்நாட்டு ஜவுளி தொழில் தேவையை ஈடு செய்யும் விதத்தில் பருத்தி விளைச்சல் இல்லை.

அத்துடன் பஞ்சு விலையை நிர்ணயிப் பதில், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள், இடைத்தரகர்கள் அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் விலையை உயர்த்தி வருகின்றனர்.

எனவே உள்நாட்டு ஜவுளி தொழிலுக்கான தேவையை ஈடு செய்யவும், ஜவுளி தொழி லில் ஈடுபட்டுள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கவும் ஒன்றிய அரசு உடனடி யாக தலையிட வேண்டும்.

இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ) மூலம் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலையில் பருத்தி கொள்முதல் செய்வதுடன், இடைத்தரகர்கள் சூதாட்டத்தை தவிர்த்து, நியாயமான விலையில் ஜவுளி தொழில்துறையின ருக்கு பஞ்சு நூல் கிடைப்பதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் உள்நாட்டுத் தேவைக்கு நூல் கிடைப்பதை உத்தரவாதம் செய்து விட்டு உபரிநூலை மட்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

இத்துடன் உள்நாட்டுத் தேவைக்கேற்ப வெளிநாடுகளில் இருந்தும் அரசு நேரடி நூல் கொள்முதல் செய்து தொழில்துறையினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலப் பொருளான நூல் விலை அடிக்கடி உயர்ந்து வருவது ஜவுளி தொழிலை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளி வருகிறது.

எனவே உள்நாட்டு பருத்தி உற் பத்தியை அதிகரிக்கவும், ஜவுளி தொழில் துறையினருக்கு, தாறு மாறான விலை உயர்வு இல்லா மல் நிலையான விலையில் சீராக பஞ்சு நூல் கிடைப்பதற்கு, விவசாயிகள் மற்றும் தொழில்துறையினர் பயனடைவதற்கு ஏற்ற ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.