தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் கூட்டங்களுக்கு அனுமதி பெறும் செயலி சிக்கலை நீக்க சிபிஎம் வலியுறுத்தல்

23 Mar 2026, 5:33 pm
தேர்தல் கூட்டங்களுக்கு அனுமதி பெறும் செயலி சிக்கலை நீக்க சிபிஎம் வலியுறுத்தல்
<p><strong>தேர்தல் கூட்டங்களுக்கு அனுமதி பெறும் செயலி சிக்கலை நீக்க சிபிஎம் வலியுறுத்தல்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 23- தேர்தல் கூட்டங்களுக்கு அனுமதி பெறும் &nbsp;சுவிதா செயலியில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலர் &nbsp;மனிஷ் நாரணவரேவிடம் வலியுறுத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சம வாய்ப்பு முறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இம்மாவட்டத்திற்கு உட் பட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக் கீடு செய்யும் பணி திங்களன்று நடைபெற்றது. &nbsp;மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரண வரே தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு &nbsp;உறுப்பினர் ச.நந்தகோபால், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, தெற்கு மாநக ரக்குழு உறுப்பினர் கல்கி ஆகியோர் கலந்து &nbsp;கொண்டனர். தேர்தல் நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சி கள் சுவிதா (SUVIDHA) செயலியில் 48 மணி &nbsp;நேரத்திற்கு முன்பாகவே, அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் &nbsp;ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் &nbsp;அந்த செயலியில் பல்வேறு சிக்கல்கள் &nbsp;நிலவுகிறது. குறிப்பாக இடம் தேர்வில் திருப் பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 5 &nbsp;காவல் நிலையங்களிலும் ஒரே இடங்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. அதே போல திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட காவல் நிலையங்களிலும் இதே நிலைதான் உள்ளது. மேலும், அதர் (other) என்ற வாய்ப்பு தரப்பட்டுள்ள பகுதியில் நாம் இடத்தைப் பதிவு செய்தால், காவல் நிலை யத்தில், நீங்கள் குறிப்பிட்டுள்ள இடம் பட்டி யல் படுத்தப்படவில்லை என அனுமதி தர மறுக்கின்றனர். எனவே, இந்த செயலியில் உள்ள இடத்தேர்வு பகுதியில் கூடுதல் இடங் களை சேர்ப்பதோடு, மற்றவை என்ற வாய்ப் பில் பதிவு செய்யும் இடத்திற்கான அனு மதி வழங்க மாவட்ட தேர்தல் அலுவலர் கவ னம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப் பட்டது. &nbsp;இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா ளர் எம்.பி.அமித், தேர்தல் நடத்தும் அலுவலர் கள் &nbsp;மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலு வலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.