தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின் கணக்கீட்டுப் பணி தனியார்மயத்தை உடனடியாக கைவிட வேண்டும்! தவெக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

26 Sept 2026, 8:59 pm
மின் கணக்கீட்டுப் பணி தனியார்மயத்தை உடனடியாக கைவிட வேண்டும்! தவெக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

மின் கணக்கீட்டுப் பணி தனியார்மயத்தை உடனடியாக கைவிட வேண்டும்! தவெக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, செப். 26 -மின் கட்டணக் கணக்கீட் டுப் பணிகளை தனியார்மயமாக்கும் முடிவை, தவெக அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தனியாருக்கு டெண்டர்!

தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்திற்கு மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர் களை நியமிக்க தனியாருக்கு டெண்டர் விடப்போவதாகவும், இப்பணிகள் அக் டோபர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளதாகவும் மின் வாரியம் அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஏற்கெனவே மின் உற் பத்தி, மின் கடத்தல், மின் விநியோகம், தற்போது மின் நுகர்வு கணக்கீடு என்று அனைத்திலும் தனியார் மயத்தை நோக்கியே தவெக அரசு பயணிக்கிறது. இந்த தனியார்மய முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.