தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

40 ஆயிரம் மருத்துவ ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்கிடுக!

14 May 2026, 9:34 pm
40 ஆயிரம் மருத்துவ ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்கிடுக!

40 ஆயிரம் மருத்துவ ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்கிடுக!

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல் சென்னை, மே 14 - ஆரம்ப - நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 40 ஆயிரம் ஒப்பந்த ஊழி யர்களுக்கு ஏப்ரல் மாத சம்ப ளத்தை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: குடும்பங்கள் வெகுவாக பாதிப்பு தமிழ்நாடு முழுவதும் தேசிய சுகாதார குழுமத் திட்டங்களின் (என்.எச்.எம்.) கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்பநர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள், கணினி இயக்குபவர்கள் என சுமார் 40 ஆயிரம் ஊழியர்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த ஊதிய தாமதம், குறைந்த ஊதியத்தில் பணி செய்யும் இந்த ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது.

எனவே, குறைந்த ஊதி யத்தில் வாழும் அந்தக் குடும்பங் கள் எதிர்கொள்ளும் நெருக்கடி யைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஏப்ரல் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.