தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு ஊழியர்கள் மரபு உடை அணிய வேண்டுமா? ஆலோசனையைக் கைவிட அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!!

2 Nov 2026, 10:54 pm
அரசு ஊழியர்கள் மரபு உடை அணிய வேண்டுமா? ஆலோசனையைக் கைவிட அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!!

அரசு ஊழியர்கள் மரபு உடை அணிய வேண்டுமா? ஆலோசனையைக் கைவிட அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!!

சென்னை, நவ. 2 -அரசு ஊழியர்களுக்கான உடைக் கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனையைக் கைவிட வேண்டும் என்று தமிழகஅரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பொருத்தமற்ற நடவடிக்கை!

அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணைவெளியிட இருப்பதாக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர்ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

வேறுபடும் மரபு உடைகள்!

மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாகவும் இருக்கிறது. தங்களுடைய மரபு உடையை ஒவ்வொருவரும் அணிந்து வருவது என்பது தேவையற்ற விவாதங்களை எழுப்பும், கேள்விக்கு உள்ளாக்கப்படும். இத்தகைய உடை குறித்த வழிகாட்டுதல்கள் நிகழ்கால சமூகச் சூழலில் தவறான முறையில் விரிவாக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அமைச்சர், அந்த ஆலோசனையை கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.