தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களைப் பாதிக்கும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தைக் கைவிடுக!

7 Oct 2026, 11:26 pm
மக்களைப் பாதிக்கும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தைக் கைவிடுக!

மக்களைப் பாதிக்கும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தைக் கைவிடுக!

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, அக். 7 -அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வுரிமையையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தைக்கைவிடுமாறு தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை விடுத்துள்ளார். அதில்கூறப்பட்டிருப்பதாவது:

மின்வாரியத் தனியார்மய முயற்சியே இது!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரி அழைப்பு விடுத்துள்ளது. ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டம் என்பதுமின்வாரியத்தை முழுக்க முழுக்க தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். ஆகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு, அதை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்து கிறது.

நிர்ப்பந்திக்கும் ஒன்றிய பாஜக அரசு

மின்சார சட்டத் திருத்த மசோதா இதுவரை நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. ஆனாலும், ஒன்றிய பாஜகஅரசு ஸ்மார்ட் மீட்டரைப் பொருத்துவதற்கான நிர்ப்பந்தங்களை அனைத்து மாநில அரசுகள் மீதும் திணித்துவருகிறது.2023-ஆம் ஆண்டு திமுக அரசு இத்தகைய ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஅதைக் கடுமையாக எதிர்த்தது. திமுக அரசும் அதனைத் திரும்பப் பெற வேண்டியநிலை ஏற்பட்டது. தற்போது தவெகஅரசும் அதே பாதையில் பயணிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 மண்டலங்களிலும் ஸ்மார்ட்மீட்டர் பொருத்தும் பணியைத் தொடங்கியுள்ளது.

சேவையை சூதாட்டத்தின் கையில் ஒப்படைப்பதா?

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு இருந்தபோது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை அரசுநிறுவனமே தனது மூலதனச் செலவில் (Capex முறை) சோதனை ஓட்டமாகத் தொடங்கியது. ஆனால், தமிழ்நாட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் தனியாரிடமிருந்து வர வேற்கப்பட்டு (Totex முறை) செயல்படுத்தப்படுவதால், இது தனியார்மயத்திற்கான நகர்வாகவே உள்ளது என்பது தெளிவு.இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிகக் கடுமையானவை யாக இருக்கும். முழுக்க முழுக்க மின்சாரச் சேவையைச் சந்தையின்சூதாட்டத்திற்கு ஒப்படைப்பதே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

இலவச மின்சாரம், மானியம் பறிக்கப்படும்

தற்போது நடைமுறையில் உள்ள 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், சிறு, குறு தொழில்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், கைத்தறி நெசவுத் தொழிலுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், குறுக்கு மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் கேள்விக்குறியாக்கப்படும்.

மின்சாரக் கட்டணம் மற்றும் விநியோகம் மீதான அரசின் கட்டுப்பாடும் கைவிடப்படும். வணிக நிறுவனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் உச்ச நேரக் கட்டணங்கள் (Peak Hour Rates) வீடுகள் மீதும் திணிக்கப்படும். இதுதவிர, மாநில உரிமை கள், சமூக நீதி, வேலைவாய்ப்புகள் மீதும் தனியார்மயம் கடுமையானபாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆகவே, அரசின் இத்தகைய முடிவு எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்திற்கும், நவீன தாராளமயப் பொருளாதாரப் பாதையின் அழுத்தத்திற்கும் பணிகிற இம்முடிவைத் தமிழ்நாடு அரசு கைவிடவேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.