அவுட்சோர்சிங் முகமை மூலமான நியமனத்தைக் கைவிட வேண்டும்! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
29 Oct 2026, 9:34 pm

அவுட்சோர்சிங் முகமை மூலமான நியமனத்தைக் கைவிட வேண்டும்! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, அக். 29 -அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்கள் லட்சக்கணக்கில் உள்ள நிலையில், அவுட் சோர்சிங் முகமை மூலமானநியமனத்தை அரசுகைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாககட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:தமிழ்நாடு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்கும் அவுட்சோர்சிங் ஏற்பாடுகளை செய்துதருவதற்கு அயல் மனித வள கழகத்தை நியமித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு எதிர்கால நிரந்தர வேலைவாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கக் கூடியது ஆகும்.

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்

தமிழ்நாடு அரசு காலிப்பணியிடங்கள் 5 லட்சத்திற்கு மேல் உள்ளன. சில ஆயிரம் காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு வருகின்றன. நிரந்தரப் பணி நியமனங்கள் இல்லாமல் மக்கள் சேவை பாதிக்கப்படுவதோடு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

‘அயல் மனித வள கழகம் (Overseas Manpower Corporation Limited)’ என்பது 1978-ல் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் அரசு நிறுவனமாகவே உரு வாக்கப்பட்டாலும், 2012-ல் உள்நாட்டு வேலை வாய்ப்புகளுக்காக அவுட்சோர்சிங் ஏற்பாடுகளை செய்யலாமென அதன் செயல் வரம்பு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. 2024-ல் தமிழ்நாடு அரசின் அங்கீகரிக்கப்பட்ட அவுட் சோர்சிங் முகமைகளின் பட்டியலில் அது இணைக்கப்பட்டது. தற்போதைய த.வெ.க. ஆட்சி யில் அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கான முகமையாக மாற்றப்பட்டுள் ளது. “நெகிழ்வான தொழிலாளர் சந்தை” என்கிறநவீன தாராளமய கோட்பாட்டின் அடியொற்றியே இந்த நகர்வுகள் அமைந்து தற்போது நிரந்தர நியமனங்கள்மீதான முழு வீச்சான தாக்குதலாக மாற்றப்பட்டுள்ளது.

அவுட்சோர்சிங் முகமை என்பது சமூக நீதிக்கு எதிரானது. ஓ.பி.சி., எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடுகளை வெறும் காகித அளவிலான ஏற்பாடுகளாக சுருக்கி விடக்கூடியது. “மாதிரி பணியமர்த்துபவராக” (Model Employer) இருக்க வேண்டியஅரசாங்கம் தனியார்களுக்கான “லாப மாதிரியாக” ஆகி விடக்கூடாது. கண்ணியமான வேலை வாய்ப்புகள் அற்ற சூழலில் இளைஞர்களின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. த.வெ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அரசுத்துறை, ஆசிரிய, பொதுத்துறைகளில் 5 ஆண்டுகள் தற்காலிக பணி முடித்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது. ஆனால், அரசின் தற்போதைய முடிவுமுற்றிலும் எதிர்த்திசை நோக்கிப் பயணிப்பதாக உள்ளது.

நிரந்தரப் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்

அயல் மனித வள கழகம் என்பது அரசு நிறுவனமாக இருந்தாலும், அது பல தனியார் முகமைகள் வாயிலாகவே இந்தப் பணியை நிறைவேற்றப் போகிறது. அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. நியமனங்களில் துவங்கி சம்பளம், சேமநல நிதி, இ.எஸ்.ஐ பயன்கள்உள்ளிட்டு அவுட்சோர்சிங் முகமைகளே பார்த்துக் கொள்ளும். இதனால் அவ்வாறு பணியில் சேரும் ஊழியர்களின்பணி நிலைமைகளுக்கும், பாதுகாப்பிற்கும் அரசு

உத்தரவாதம் அளிக்காது.ஆகவே, அவுட்சோர்சிங்கிற்கு முழுமையாக வழி வகுக்கிற அயல் மனித வள கழகம் நியமனத்தை ரத்து செய்து, நிரந்தர பணி நியமனங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.