விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற சிபிஎம் வலியுறுத்தல்
26 May 2026, 8:59 pm

விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, மே 26 - விவசாயிகளின் பயிர்க் கடனை தேர்தல் கால வாக்கு றுதிகளின்படி தள்ளுபடி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது

இதுகுறித்து கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயி கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளு படி தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் திங்களன்று (25.05.2026) வெளியிட்டுள் ளார். தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றும் விதமான இத்த கைய அறிவிப்பு வரவேற்கத் தக்கது.

குறு விவசாயிகளுக்கு ரூ.50,000/-, சிறு விவசாயி களுக்கு ரூ. 25,000/- வரை தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கு பெற்ற கடன் தொகையில் சிறு தொகை மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதி அடிப்ப டையில் இந்த அறிவிப்பு இல்லை என்பதை விவசாயி கள் சார்பாக சுட்டிக் காட்டுகிறோம்.

எனவே, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயி கள் பெற்ற பயிர்க்கடன் முழு மையாக தள்ளுபடி, 5 ஏக்க ருக்கு மேல் நிலம் வைத்து ள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் கால வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில் நட வடிக்கை எடுக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.