தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாடுகள் வெட்டத் தடை; சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமற்ற தீர்ப்பு - தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்!

29 May 2026, 12:53 pm
மாடுகள் வெட்டத் தடை; சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமற்ற தீர்ப்பு - தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டுப் பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை விதித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, காலதாமதமின்றி மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாகக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் 27.5.2026 அன்று வழங்கிய தீர்ப்பில், பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது எந்தவொரு நாளிலோ பசு மற்றும் கன்றுகளைப் பலியிடக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

பாரா 16-இல் தன்னுடைய வாதங்களைக் குறிப்பிட்டு, மேலே உள்ள விதிமுறைகளையெல்லாம் கணக்கில் கொண்டால், அனுமதி பெற்றுள்ள இடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் எந்த விலங்கையும் பலியிடக் கூடாது என்ற முடிவிற்கே வர வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதுதான் சட்டம் என்று அவர்கள் கருதும்பட்சத்தில் அனைத்து விலங்குகளையும் பலியிடுவதற்குத் தடை விதித்திருக்கக் கூடும். மாறாக, மாடு மற்றும் கன்றுகளுக்கு மட்டும் பொருந்துவதாகவும், பக்ரீத் என்கிற பண்டிகையைக் குறிப்பிட்டும் தீர்ப்பு வழங்கியிருப்பது முற்றிலும் ஆட்சேபகரமானதும், உள்நோக்கமும் கொண்டதாகும்.

ஆடு, மாடு, கோழிகளை நேர்த்திக்கடன் செய்யும் பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. உணவுக்காக மாடுகளையும் கன்றுகளையும் பலியிடுகிற வழக்கமும் இருக்கவே செய்கிறது. இதனை நிறுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிடுவது, ஒரு பகுதி மக்களின் உணவுப் பழக்கத்திலும் வழிபாட்டு முறைகளிலும் தலையிடுவதாகும். கடந்த காலத்திலும் மதத் துவேஷத்தோடு இத்தகைய கோரிக்கைகள் வந்தபோதெல்லாம், இந்த வழக்கத்தைக் கடைப்பிடிப்போரின் கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில், பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய தினம் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருப்பது பொருத்தமற்றதாகும்.

எனவே, காலதாமதமின்றி மேல்முறையீடு செய்து உரிய நியாயத்தையும், மக்களின் உணவு உரிமையையும் நிலைநாட்டிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.