தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதவெறி கலவரம் தூண்டுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்திடுக! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

20 Jul 2026, 9:56 pm
மதவெறி கலவரம் தூண்டுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்திடுக! தமிழக அரசுக்கு சிபிஎம்  வலியுறுத்தல்

மதவெறி கலவரம் தூண்டுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்திடுக! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 20 - தமிழகத்தில் மதவெறிக் கலவரத்தைத் தூண்டுபவர்கள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

காவல்துறையுடன் சென்று கொலை மிரட்டல்!

திருவொற்றியூர், தாங்கல் பீர்பயில்வான் பகுதியில் வசிக்கும் அலி என்பவர் மாநகராட்சி யில் உரிமம் பெற்று இறைச்சிக் கடை நடத்தி வரு கிறார். இந்நிலையில், ‘பாரத் முன்னணி’ என்ற அமைப்பைச் சேர்ந்த சிவாஜியும், மற்றும் சிலரும் 16.7.2026 அன்று இரவு 11.30 மணிக்கு அலியின் வீட்டில் அத்துமீறி நுழைந்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மாடுகளை வெட்டக் கூடாது என அச்சுறுத்தலும் செய்துள்ளனர். இவர்களுடன் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சில காவலர்களும் உடன் சென்றுள் ளனர். அவர்களது முன்னிலையில் தான் அச்சுறுத்த லும், கொலை மிரட்டலும், மதவெறி நடவடிக்கை களும் நடந்துள்ளன. இது மதவெறி கலவரங் களைத் தூண்டுவதற்கான திட்டமிட்ட முயற்சியே என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இது மிகுந்த கண்டனத்துக்குரியது.

அச்சுறுத்தல் மூலம் மக்களிடம் பணம் பறிப்பு!

சிவாஜி உள்ளிட்ட இதே நபர்கள் சில மாதங் களுக்கு முன் கார்கில் நகர் பகுதியில் மதவெறி கல வரத்தை தூண்டக்கூடிய நடவடிக்கைகளில் ஈடு பட்டு பணம் வாங்கியதாகவும் தகவல் உள்ளது. இதன்மூலம் மதக்கலவரத்தைத் தூண்டி பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையில் இவர்கள் தொ டர்ந்து ஈடுபடுகிறார்கள் என்று தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட அலி அவர்க ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற் றியூர் தெற்குப் பகுதிக் குழுவும் புகார் அளித்து உள்ளனர்.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை!

சங் பரிவார அமைப்புகள் நாடு முழுவதும் செய்யும் கலவர நடவடிக்கைகளைத் தமிழ கத்தின் தலைநகரான சென்னையிலும் துவங்கி யுள்ளனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடசென்னை மாவட்டக்குழுவும், அப்பகுதி யின் பல்வேறு அமைப்புகள் இணைந்து உரு வாக்கியுள்ள நீதிக்கான போராட்டக் குழுவும் மதமோதலைத் தூண்டிவிடும் குற்றவாளிகள் மீதும், அதற்குத் துணை போன காவலர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியுடன் குரல் கொடுத்து வருகின்றனர்.

காவல்துறையே துணைபோவது ஆபத்து

சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்து அமைதியை யும், மக்கள் ஒற்றுமையையும் நிலைநாட்டும் பொறுப்பும் கடமையும் உள்ள காவல்துறை, ஒருசார் பாக குற்றவாளிகள் பக்கம் நிற்பது சமூகத்தில் ஆபத்தான பல விளைவுகளை ஏற்படுத்தும். முதல் தகவல் அறிக்கையில், குற்றவாளிகள் மீது பிரச்சனையின் தீவிரத்துக்கு ஏற்ப, BNS 308(4) போன்ற சட்டப் பிரிவுகள் போடப்பட வில்லை. உள்ளூர் காவல்துறை மூலம் நீதி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, காவல்துறையின் உயர் அதிகாரிகள் உட னடியாக தலையிட்டு, குற்றவாளிகள் மீதும், அவர்களுக்கு துணையாக செயல்பட்ட காவ லர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.