தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலைகளில் இரும்புத் தடுப்புகள் காற்றில் சாய்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

12 Jun 2026, 10:31 pm
சாலைகளில் இரும்புத் தடுப்புகள் காற்றில் சாய்ந்து  விபத்து ஏற்படுவதை தடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

சாலைகளில் இரும்புத் தடுப்புகள் காற்றில் சாய்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 12- திருப்பூர் மாநகரில் நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகள் காற்று சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பு மாநகர காவல் ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, வடக்கு மாந கரச் செயலாளர் பா.சௌந்தரராசன், வேலம் பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் ஆகியோர் வெள்ளியன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், கடந்த வியாழனன்று காலை தாரா புரம் சாலை பழவஞ்சிபாளையம் சாலை பிரிவு அருகில் சாலை நடுவே வைக்கப்பட்டி ருந்த இரும்புத்தடுப்புகள் பலத்த காற்றின் கார ணமாக, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீதும், கிருத் திகை வாசன் என்பவர் மீதும் திடீரென சாய்ந்த தில் அவர்கள் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வெயில் குறைந்து காற்று காலமாக உள்ளது.

இத னால் நகரில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள இரும்புத்தடுப்புகள் தொடர்ந்து திடீர் திடீரென சத்தத்துடன் சாலைகளில் சாய்ந்து விழுந்து வருகின்றன. இதனை போக்குவரத்து காவ லர்களும் அவ்வப்போது சரி செய்து வரு கின்றனர்.

எனினும் மேற்கூறியவாறு இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது எதிர்பாராத வகையில் திடீரென சாய்ந்து விழும் தடுப்புகளை தடுத்திட போக்குவரத்து காவல் துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். நடுவில் உள்ள இரும்புத் தடுப்பு கள் காற்றில் சாயாத வகையில் உறுதியாக அமைத்திட வேண்டும்.

தற்காலிக இரும்பு தடுப்புகளை உடனடியாக அகற்றி சாலை களில் செல்வோரின் பாதுகாப்பை உறுதிப் படுத்த மாநகரப் போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இக்கோரிக்கையை கவனமுடன் கேட்ட காவல் ஆணையர் ராஜேந்திரன், நியா யமான இந்த பிரச்சனையில் உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித் தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.