தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எல்.ஐ.சி. பெண் மேலாளர் எரித்துக் கொலை விரைவான விசாரணைக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

21 Jan 2026, 3:58 pm
எல்.ஐ.சி. பெண் மேலாளர் எரித்துக் கொலை விரைவான விசாரணைக்கு சிபிஎம் வலியுறுத்தல்!
<p><strong>எல்.ஐ.சி. பெண் மேலாளர் எரித்துக் கொலை விரைவான விசாரணைக்கு சிபிஎம் வலியுறுத்தல்!</strong></p> <p>சென்னை, ஜன. 21 - மதுரையில் எல்.ஐ.சி. நிறுவன பெண் மே லாளர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், விரைந்து நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை &nbsp;விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: விசாரணையில் உறுதியான கொலை மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள &nbsp;எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் மேலாள ராக பணியாற்றி வந்த கல்யாணி நம்பி என்ப வர் டிசம்பர் 18 அன்று அலுவலகத்தில் பரவிய நெருப்பில் சிக்கி உயிரிழந்தார். ஒரு &nbsp;மாத கால விசாரணைக்கு பின்னர் அது விபத்து அல்ல, அதே அலுவலகத்தில் உடன் &nbsp;பணிபுரியும் அதிகாரி ஒருவரால் நிகழ்த்தப் பட்ட கொலை என்று காவல்துறை வழக்குப் &nbsp;பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரான ராம் என்பவரைக் கைது செய்து இருக்கிறது. காவல்துறையிடம் &nbsp;சிபிஎம் வலியுறுத்தல் கல்யாணி நம்பி உயிரிழப்பு ஏற்பட்ட உடனேயே பிணவறை முன்பாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் &nbsp;காவல்துறையிடம் இது குறித்த விசாரணை தேவை, இதன் பின்புலத்தில் சதி ஏதும் &nbsp;உள்ளதா என்பது கண்டறியப்பட வேண்டு மென்று வலியுறுத்தினர். &nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடே சன், மதுரை மாநகர் மாவட்டக்குழு செயலா ளர் மா. கணேசன் ஆகியோரும் காவல்துறை யைத் தொடர்பு கொண்டு விசாரணையை விரைவுபடுத்தக் கோரினர். இத்தகைய சூழலில் காவல்துறை கல்யாணி நம்பி எரித்து கொல்லப்பட்டுள்ளார் என்ற முடி வுக்கு வந்து கைது நடவடிக்கையையும் மேற்கொண்டு இருக்கிறது. காவல்துறை யின் இந்நடவடிக்கை பாராட்டத்தக்கது. பாதுகாப்பின்மையை &nbsp;உணர்த்தும் சம்பவம் சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற &nbsp;சூழல் இருப்பதும், எல்.ஐ.சி போன்ற &nbsp;மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனத்தி லேயே இத்தகைய கொடூரம் நிகழ்ந்து இருப்பதும் அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த வருத்தத் திற்கும் உரியதாகும். அலுவலக நேரங்களுக்கு &nbsp;அப்பாற்பட்டு பெண்கள் பணிபுரியும் சூழல்களில் அவர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட உரிய வழி காட்டல்கள் வழங்கப்பட வேண்டும். பெண்கள் இன்று எல்லாத் தளங்களிலும் பாலின பாரபட்சங்களை உடைத்து, கடந்து &nbsp;முன்னேறுவது ஊக்குவிக்கப்பட வேண்டும். எல்.ஐ.சி. மேலாளர் கல்யாணி நம்பி அவர்களின் படுகொலைக்கு விரைவான நீதி &nbsp;வழங்குவதை உறுதி செய்ய வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.