தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொன்னேரி அருகே தனிநபர்கள் வசமுள்ள பட்டாக்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க சிபிஎம் வலியுறுத்தல்

16 Feb 2026, 2:37 pm
பொன்னேரி அருகே தனிநபர்கள் வசமுள்ள  பட்டாக்களை மீட்டு உரியவர்களிடம்  ஒப்படைக்க சிபிஎம் வலியுறுத்தல்
<p><strong>பொன்னேரி அருகே தனிநபர்கள் வசமுள்ள &nbsp;பட்டாக்களை மீட்டு உரியவர்களிடம் &nbsp;ஒப்படைக்க சிபிஎம் வலியுறுத்தல்</strong></p> <p>திருவள்ளூர், பிப்.16- இடமணிகுப்பத்தில் தனிநபர்கள் வசமுள்ள பட்டாக்களை மீட்டு உரிமை யாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். பொன்னேரியை அடுத்த, &nbsp;பழவேற்காடு அருகில் உள்ள இடமணிகுப்பத்தில் சுமார் &nbsp;35 மீனவ &nbsp;குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீன்பிடி தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். &nbsp;இந்த நிலையில்,அதே கிரா மத்தில் &nbsp;சர்வே எண் 122ல் ஒரு ஏக்கர் கிராம நத்தம் நிலத்தை திருப்பாலைவனத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து &nbsp;20 ஆண்டுகளுக்கு முன்பு, இட மணிகுப்பத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர் &nbsp;அந்த இடத்தை கிரயத்திற்கு வாங்கி யுள்ளனர். இதனை தொடர்ந்து விலைக்கு வாங்கிய அந்த இடத்திற்கு, பட்டா வழங்க வேண்டும் என பொன்னேரி வட்டாட்சியரி டம் மனு கொடுத்த அடிப்படையில், 2019 ஆம் ஆண்டு 30 குடும்பத்திற்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டது. அடுத்ததாக, தொகுப்பு வீடுகள் கட்ட வேண்டும் என்பதற்காக, &nbsp;அதே கிராமத்தைச் சேர்ந்த 5 நபர்கள் இந்த பட்டாக்களை அந்த குடும்பங்களில் இருந்து வாங்கிச் சென்றுள்ளனர். அதன் பிறகு 6 ஆண்டுகளாக தொகுப்பு வீடுகள் கட்டாத நிலையில் பட்டாக்களை திருப்பித் தர வேண்டும் என கேட்டுள்ளனர். பட்டாக்களை வாங்கி சென்ற நபர்கள் திரும்ப தர முடியாது என இழுத்தடித்து வருகின்றனர். இந்த நிலையில், தனிநபர்கள் வசமுள்ள &nbsp;பட்டாக்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் &nbsp;மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் என்.ரமேஷ்குமார் பொன்னேரி வட்டாட்சியரிடம் பிப் 9 அன்று மனு அளித்தார். &nbsp;இதனிடையே விசாரணைக்கு வந்த திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர், &nbsp;என்னிடம் நீங்கள் எதுவும் பேசக்கூடாது. வீடு கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். பிறகு எதற்கு உங்களுக்கு பட்டா என்று அடா வடியாக பேசி பிரச்சனையை மேலும் கிளப்பி விட்டு சென்றுள்ளார். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதில் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் ஜி.விநாயகமூர்த்தி, டி.நித்யானந்தம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் &nbsp;கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.