தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் அதிகார வன்மத்தைக் கைவிடுக! புதுச்சேரி ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

5 Jun 2026, 11:48 pm
எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் அதிகார வன்மத்தைக் கைவிடுக!   புதுச்சேரி ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்
<p><strong>எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் அதிகார வன்மத்தைக் கைவிடுக! புதுச்சேரி ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்</strong></p><p>புதுச்சேரி, ஜூன் 5- புதுச்சேரி மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சாலையோர வியாபாரிகள் மீது நடத்தப்படும் அதி கார வன்முறையைக் கைவிட வேண்டும் என்றும், அவர்களின் வாழ்வாதாரத் தைப் பாதுகாக்க 2014-ஆம் ஆண்டு சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ. பெருமாள், ஆர். ராஜாங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து இந்த மனுவை வழங்கினர். மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: அதிகார வன்முறைக்கு கண்டனம் ஜூன் 2 முதல் 22-ஆம் தேதி வரை நகர மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பகுதி களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிர மிப்பு அகற்றும் பணிகள், எளிய மக்கள் மீது கடுமையான அதிகார வன்மத்து டன் நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்ட ப்பட்டுள்ளது. இது அரசியல் சாசன பிரிவு 14 வழங்கும் சமத்துவ உரிமைக்கு எதிரானது என கட்சி சுட்டிக்காட் டியுள்ளது. பொருளாதார நெருக்கடி புதுச்சேரியில் புதிய தொழில் வாய்ப்புகள் இல்லாமலும், தொழிற் சாலைகள் மூடப்பட்டும் வரும் சூழலில், சிறு முதலீட்டில் சாலையோர வியாபா ரம் செய்யும் ஏழை மக்களை அப்புறப் படுத்துவது அவர்களின் வாழ்வாதா ரத்தை முற்றிலுமாகச் சிதைக்கும். எனவே, ‘தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014’-ஐ மாவட்ட நிர்வாகம் உடன டியாக அமல்படுத்த வேண்டும். மதுக்கடைகள் மற்றும் போக்கு வரத்து: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந் துள்ள அந்நிய மதுபானக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். பிரதான சாலைகளில் போக்குவரத் திற்கு இடையூறாக நிற்கும் வாகனங் களை முறைப்படுத்தவும், சுற்றுலா வாகனங்களுக்கெனத் தனி வாகன நிறுத்துமிடங்களை உருவாக்கவும் கோரப்பட்டுள்ளது. நகர அமைப்பு திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களில் வாகன நிறுத்து வசதி இருப்பதை நகர அமைப்பு குழும விதிகள் படி உறுதி செய்ய வேண்டும். மேலும், பொதுப் போக்குவரத்தை வலு ப்படுத்த வேண்டும் என்றும், இருசக்கர வாகன வாடகை நிலையங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை நீர்நிலைகள் மற்றும் அரசு சொத்து க்களின் ஆக்கிரமிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட வேண்டும். மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகே, இவை குறித்த கொள்கை முடிவு களை எடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளின் வாழ் வாதாரத்தைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் உறுதி யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.