தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் அரசியல் கட்சியினர் வாக்கு சேரிகரிப்பதை உறுதிசெய்ய சிபிஎம் வலியுறுத்தல்

21 Mar 2026, 2:42 pm
அடுக்குமாடி குடியிருப்புகளில் அரசியல் கட்சியினர் வாக்கு சேரிகரிப்பதை உறுதிசெய்ய சிபிஎம் வலியுறுத்தல்
<p><strong>அடுக்குமாடி குடியிருப்புகளில் அரசியல் கட்சியினர் வாக்கு சேரிகரிப்பதை உறுதிசெய்ய சிபிஎம் வலியுறுத்தல்</strong></p> <p>கோவை, மார்ச் 21- அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களிடையே அரசி யல் கட்சியினர் வாக்கு சேரிகரிப்பதை தேர்தல் ஆணையர் உறுதிசெய்ய வேண் டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளின் தேர்தல் பார்வை யாளர்கள், செலவின பார்வையாளர் கள், காவல் துறை பார்வையாளர்கள் பங்கேற்ற தேர்தல் நடத்தை விதிகள் &nbsp;அமலாக்கம் குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் வெள்ளியன்று நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.இராமமூர்த்தி, கே.அஜய் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இக் கூட்டத்தில், சிபிஎம் சார்பில் முன்வைக் கப்பட்ட ஆலோசனைகள் பின்வரு மாறு: 85 வயது வாக்காளர்களுக்கு வீடு வீடாக தபால் வாக்குப்பதிவு செய் யும்போது, அனைத்துக்கட்சிக ளின் வாக்குச்சாவடி முகவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், தபால் வாக்கு விவரங்களை அனைத் துக்கட்சிகளுக்கும் வழங்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வேட்பா ளர்கள், அரசியல் கட்சியினர் வாக்கு &nbsp;சேகரிக்க செல்லும் போது, குடியி ருப்பு நிர்வாகிகள் விடுவதில்லை. சில நிர்வாகிகள் அவருக்கு வேண்டிய கட்சி களை மட்டும் அனுமதிப்பதாகவும், இதர கட்சிகளை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. வாக்கா ளரிடம் வாக்கு கேட்பது அனைத்து கட்சிகள் மற்றும் வேட்பாளர் உரிமை. எனவே, வாக்கு சேகரிக்க அனுமதிக்க அந்தந்த குடியிருப்பு நிர்வாகிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண் டும். வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிபில் (வாக்காளர் விபர படிவம்) இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் புகைப் படத்துடன் அடையாள சீட்டு வழங்கப் பட்டது. தற்போது புகைப்படம் இருக் காது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்க வில்லை. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வழங்க வேண்டும். அண்மையில் வெளியிடப்பட்ட வாக்கா ளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் வசிப்பிட வீதி, நகர், லே அவுட் குறிப் பிடப்பட வேண்டும். இதுகுறித்து மார்ச் 6 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தல் நடத்த விதிகள் அமலாக்க கூட்டத்திலும் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.