தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சைபன் பகுதியில் மறுகால் பாயும் தண்ணீரை நிறுத்திடுக! குமரி ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

15 Jul 2026, 10:38 pm
சைபன் பகுதியில் மறுகால் பாயும் தண்ணீரை நிறுத்திடுக! குமரி ஆட்சியரிடம்  சிபிஎம் வலியுறுத்தல்

சைபன் பகுதியில் மறுகால் பாயும் தண்ணீரை நிறுத்திடுக! குமரி ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜூலை 15- குமரி மாவட்டம் இராஜா க்கமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சைபன் நகரில் மறுகால் பாய்ந்து சாலை யை சேதமாக்கும் தண்ணீ ரை நிறுத்திடக் கோரி சிபிஎம் ராஜாக்கமங்கலம் ஒன்றி யக்குழு சார்பில் குமரி ஆட்சியரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜாக்க மங்கலம் ஒன்றிய செய லாளர் எஸ்.ற்றி.ராஜகுமார் தலைமையில் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: நங்கூரன் பிலாவிளை சைபன் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர மறுகால் பாய்ந்து சாலைகளை சேதப் படுத்தி வருவதை தடுத்து நிறுத்திடவும், சைபன் கரைகளை உயர்த்தியும் தூர்வாரியும் சீரமைத்திட வேண்டும்.

கன்னியாகுமரி மாவட் டம் பார்வதிபுரம் வழியே செல்லும் அனந்தனார் கால் வாய் வல்லன்குமாரன் விளை என்ற இடத்திலிருந்து பிரிந்து அத்திக்கடை கால் வாயாக கடைவரம்பு நோக்கி செல்கிறது.

நீர்வளத்துறை க்கு சொந்தமான இந்த அத்திக்கடை கால்வாய் செல்லும் நங்கூரன்பிலா வினை பகுதியில் உள்ள சைபனில் தேங்கும் செடி கள் மற்றும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர மறுகால் பாய்ந்து வரு கிறது.

இத் தண்ணீர் அருகில் உள்ள பொட்டல்-புத்தன் துறை சாலை வழியே வழிந்தோடி செல்வதால் சாலையோரம் அரிப்பு ஏற் பட்டு வாகனப் போக்கு வரத்து தடைபடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து தண்ணீர மறு கால் பாய்ந்து வழிந்தோடி செல்வதால் பொதுமக்கள் சாலை வழியே நடந்து செல்ல முடியாத நிலை யில் உள்ளனர். இரு சக்கர வாகனங்கள் அவ்வப்போது சாலையில் வழுக்கி விழுந்து அடிக்கடி விபத்துக் கள் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்து வருகிறது.

ஆகவே மேற்படி தண்ணீ ரால் சாலையில் பாதிப்பு ஏற்படுவதை தடுத்திடவும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கிடவும், சைபன் பகுதியில் அடைப்பு ஏற்படுவதை அவ்வப்போது சரி செய்து செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.