தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வு மன அழுத்தம் : தொடரும் தற்கொலைகள்! கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற சிபிஎம் வலியுறுத்தல்

21 Jun 2026, 9:03 pm
நீட் தேர்வு மன அழுத்தம் :  தொடரும் தற்கொலைகள்! கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற சிபிஎம் வலியுறுத்தல்

நீட் தேர்வு மன அழுத்தம் : தொடரும் தற்கொலைகள்! கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 21 - நீட் தேர்வு மன அழுத்தத்தால், மாண வர்கள் தற்கொலை செய்து சம்ப வங்கள் தொடர்ந்து அரங்கேறு கின்றன. எனவே, பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டிய லுக்கு மாற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தோர் ராமகிருஷ்ணன், கலைச்செல்வி. இவர்களது மூத்த மகள் ரோஷினி (19) வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நீட் தேர்வு மன அழுத்தம் கார ணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை, சேலம் ஆகிய இடங்களில் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஒசூர் அருகே பாகலூரில் ஞாயிறன்று (ஜூன் 21) ஒரு மாணவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள் ளார்.

நம்பிக்கையை விதைக்க வேண்டும்

சமீப காலமாக நாடு முழுவதும் இத்தகைய தற்கொலைகள் அதி கரித்து வருகின்றன. மாணவர்கள் இத்தகைய துயரமான முடிவுகளைக் கைவிட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கை யை எதிர் கொள்ள வேண்டியது அவ சியம். அரசும் சமூகமும் அமைப்பு களும் அத்தகைய நம்பிக்கையை விதைத்திட வேண்டும்.

கடந்த மே 3 ஆம் தேதி நடை பெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேடு காரணமாக 23 லட்சம் மாண வர்கள் பாதிக்கப்பட்டனர். ஞாயி றன்று 5440 மையங்களில் மறு தேர்வு நடைபெற்றது. இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு குளறுபடிகளுக்கு இது ஓர் உதாரணம். இது குளறுபடி மட்டுமல்ல, அதிகாரங்களை மையத்தில் குவித்துக் கொள்வது, தனியார் லாப வேட்டை போன்ற அம்சங்களுடன் தொடர்புடையது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுக!

தொடரும் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த, நீட் தேர்வை முற்றி லுமாக ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையைக் உடனடியாக கலைக்க வேண்டும். பொதுப் பட்டிய லில் உள்ள கல்வியை மாநிலப் பட்டி யலுக்கு மாற்றிட வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும், தற்கொலை செய்து கொண்டுள்ள கோயம்புத்தூர், சேலம் மாவட்டம் எடப்பாடி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த மூன்று மாணவிகளின் குடும்பத்திற் கும், ஓசூர் மாணவர் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கி டவும், அக்குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமென வும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.