மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளை, பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க சிபிஎம் வலியுறுத்தல்
22 May 2026, 11:34 pm

மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளை, பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க சிபிஎம் வலியுறுத்தல்

தருமபுரி, மே 22- தருமபுரி மாவட்டத்திற்குள் இயக் கப்படும் பேருந்துகளை, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் வெளியிட்டுள்ள அறிக் கையில், தருமபுரி நகரில் போக்குவ ரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் பேருந்து நிலையம் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர்.

அதன்படி, சமீபத்தில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அதேசமயம், பழைய பேருந்து நிலையத்திலுள்ள சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எனவே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத் தூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்து களை, பழைய பேருந்து நிலையத்திலி ருந்து இயக்க வேண்டும் என அரசி யல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இக் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வா கம் போக்குவரத்தில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதேபோல பென்னா கரம், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, சேலம் செல்லும் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இந் நிலையில், பழைய பேருந்து நிலையத் துக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கும் சென்று வர வேண்டுமென சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் நகரில் குறிப்பாக, நான்கு ரோடு அருகில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்திற்குள் இயக்கப் படும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், வெளி மாவட் டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.