கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
18 Nov 2025, 3:21 pm

விரைவு ரயிலில் பெட்டிகளை குறைக்கும் முடிவை கைவிட சிபிஎம் வலியுறுத்தல்

தருமபுரி, நவ.18- பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயிலில் இரண் டாம் வகுப்பு பெட்டிகளை குறைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் தருமபுரி மாவட்டச் செயலா ளர் இரா.சிசுபாலன் விடுத்துள்ள அறிக்கையில், ஒசூர், தருமபுரி, சேலம், நாமக்கல் வழியே இயங்கும் பெங்க ளூரு - நாகர்கோவில் விரைவு ரயில் பெட்டிகளில் ஜன.14 ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 11 இல் இருந்து 6 ஆகக் குறைக்கப்படவுள்ளது. இதனால் சாதாரண, நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வணிக ரீதியாகவும், வேலைக் காகவும் ஒசூர், பெங்களூரு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இத்துடன் வேலைக்காக செல்லும் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகி றது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருவில் குழந்தையின் பாலினம் குறித்து சட்டவிரோதமாக தெரிவித்த 5 பேர் கைது

தருமபுரி, நவ.18- பாலக்கோடு அரசு மருத்துவமனை செவிலியர் உதவியுடன் ஸ்கேனிங் பரிசோதனையின்போது, குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த ஆந்திர மாநில இடைத்தரகர்கள் உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளிடம், குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிப்பதாக தலை மை மருத்துவர் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து மருத்துவமனையில் உள்ள கண் காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசா ரணை மேற்கொண்டதில், மருத்துவமனையில் பணிபுரி யும் செவிலியர் பரிமளா உதவியுடன் இடைத்தரகர்கள் சிலர் குழந்தையின் பாலினம் குறித்து கர்ப்பிணிகளிடம் தெரிவிப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் தலைமை மருத்துவர் பால சுப்பிரமணியம் புகாரளித்தார். அதன்பேரில் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து தனிப்படை யினர் விசாரணை மேற்கொண்டு, குழந்தையின் பாலி னத்தை தெரிவித்த இடைத்தரகர்களான ஆந்திர மாநி லத்தைச் சேர்ந்த கிளாரா மேனகாதேவி (25), பிரதீப் (26), பாலக்கோடு அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (41) உள்ளிட்ட ஐந்து பேரை போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி யோடிய செவிலியர் பரிமளாவை போலீசார் தீவிர மாக தேடி வருகின்றனர்.

2026 மலர் கண்காட்சி: விதை சேகரிப்புப் பணி தீவிரம்

உதகை, நவ.18- 2026 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள மலர் கண்காட்சிக்காக, உதகை தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கிறது. கோடை சீசனின்போது, உதகைக்கு வரும் சுற்று லாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காக்களில் காய்கறி கண்காட்சியும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், உதகை தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதனால், ஆண்டுதோறும் தாவரவியல் பூங்கா மற்றும் தொட்டி களில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்த மலர் செடிகளில் ஏப்ரல் இறுதி வாரம் முதல் பூக்கள் பூக்க துவங்கும். மே மாதம் இரண்டாவது வாரத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது பல வகை யான வண்ண வண்ண மலர் பூத்துக்குலுங்கும் மலர் செடி கள் நடவு செய்யப்பட்ட தொட்டிகள் அலங்கரித்து வைக் கப்படும். இந்த மலர் கண்காட்சிக்காக நாற்றுகள் நடவு செய்ய தற்போது விதை சேகரிப்பு பணிகள் நடந்து வரு கிறது. 6 மாதங்களுக்கு பின் பூக்கக்கூடிய மலர் செடிக ளான பென்சீனியம், பெட்டூனியம் மற்றும் சால்வியா போன்ற சில மலர் செடிகளின் விதைகள் சேகரிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அதேபோல், விதை கள் சேகரிக்கப்பட்ட மலர் செடிகள் மற்றும் மழையில் அழுகிய செடிகளை அகற்றும் பணிகளும் துவக்கப்பட் டுள்ளது. மேலும், அப்பகுதிகளில் பாத்திகளை சீர மைத்து விதைப்பிற்காக தயார்படுத்துப்பட்டு வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறு கையில், 2026 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற வுள்ள மலர் கண்காட்சிக்காக, பூங்காவை தயார் செய் யும் பணிகள் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக விதைகள் சேகரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மேரி கோல்டு, சால்வியா, பெட்டூனியம் மற்றும் டெல்பீனியம் ஆகிய செடிகளின் விதைகள் சேகரிக்கப்பட்டு வருகி றது. விதைகள் சேகரிப்புப் பணிகள் முடிந்தவுடன் விதைப்பு பணிகள் துவக்கப்படும். பின்னர், நடவு பணி கள் படிப்படியாக துவக்கப்பட்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறும், என்றனர்.

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தருமபுரி, நவ.18- தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள வடக்கு தெரு, கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் கணே சன் (38) இவர், பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் நல்லம்பள்ளி அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், திங்களன்று காலை கணேசன் அவரது வீட்டில், அவருடைய ஆடைகளை அயர்ன் செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதால் கணேசன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத் துவர்கள் கணேசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

வன்கொடுமையால் உயிரிழந்தவரின் துணைவியாருக்கு தீருதவி வழங்கல்

ஈரோடு, நவ.18- பெருந்துறை அருகே பட்டியலினத் தைச் சேர்ந்ததவர் வன்கொடுமையால் உயிரிழந்த நிலையில், அவரின் துணை வியாருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் தீரு தவி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே மடத்துபாளையத்தைச் சேர்ந்த வர் பாலசுப்பிரமணி. இவர் வேலை செய்து வந்த நிறுவனத்தில் இரண்டு மாதமாக சம்பளப்பாக்கி இருந்தது. மேலும் பட்டியலினத்தவர் என்பதால் கூடுதல் வேலைப்பளுவும் திணிக்கப் பட்டது. இதனால் மன உளைச்சல டைந்த பாலசுப்பிரமணி, இதுகுறித்து வீடியே வெளியிட்டு தூக்கிட்டு தற் கொலை செய்துகொண்டார். அப்பதி வில் குழந்தைக்கு பால் வாங்க கூட முடி யாமல், மன உளைச்சலால், தான் பணி யாற்றிய நிறுவனத்தின் உரிமையாள ரால் இந்த முடிவு எடுத்ததாகப் பதிவு செய்துள்ளார். கடந்த நான்கு மாதங்க ளுக்கு முன் நடந்த மரணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாதிக்கப்பட்டவர்க ளுக்கு ஆதரவாக நின்றது. அதனால் பாலசுப்பிரமணி மரணத்திற்குக் காரண மான ஆதிக்க சாதியைச் சேர்ந்த தனி யார் நிறுவனத்தினர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்குப்பதிவு செய் யப்பட்டது. அதன் காரணமாக பால சுப்ரமணி துணைவியார் யோகேஸ் வரிக்கு தீருதவியாகவங்கியில் ரூ.6 ஆறு லட்சம் அரசு செலுத்தியுள்ளது. மேலும், குற்றவாளிக்கு தண்டனை பெற் றுத் தரும் வரை வழக்கை உறுதியாக நடத்துவோம் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.