தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

20 Feb 2026, 2:39 pm
கொள்முதல் நிலையங்களில்  நெல் மூட்டைகள் தேக்கம் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
<p><strong>கொள்முதல் நிலையங்களில் &nbsp;நெல் மூட்டைகள் தேக்கம் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்</strong></p> <p>திருவாரூர், பிப்.20- &nbsp;திருவாரூர் மாவட்டம் முழுவதும் 522 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், நெல்மணிகளை அங்கேயே இயக்க நடவடிக்கை இல்லாமல் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது. இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் தெரிவிக்கையில், &ldquo;திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு 522 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முன்னதாக திறந்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் நடவடிக்கை வரவேற்கப்பட்டது. ஆனால் மாவட்டத்தில் பல மையங்களில் தினந்தோறும் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சுமார் 5000 முதற்கொண்டு அங்கேயே இருப்பு வைக்கும் நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் வெளியில் நெல் மூட்டைகளை குவித்து தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கும் நிலையும் உள்ளது. நகர்வு இல்லாமல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கும் நிலை தொடர்ந்தால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள ஊழியர்கள் இழப்பு நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவார்கள். மேலும், டெல்டா மாவட்டத்தில் மழை அறிவிப்பு வெளியாகி உள்ளது. &nbsp;ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப் பிரச்சினையில் கவனம் செலுத்தி கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை, உடனுக்குடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு நெல் சாக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வேண்டும்&rsquo;&rsquo; எனத் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.