சமூக விரோதிகளின் கூடாரமான குழித்துறை ஆரம்ப சுகாதார நிலையம் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
21 May 2026, 10:44 pm

சமூக விரோதிகளின் கூடாரமான குழித்துறை ஆரம்ப சுகாதார நிலையம் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

குழித்துறை,மே 21- குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக் குட்பட்ட 7-வது வார்டு பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

24 மணி நேரம் செயல்படும் இந்த சுகா தார நிலையத்தின் சுற்றுப்புறப் பகுதிக ளில் புதர்கள் நிறைந்து விஷ பாம்புகளின் கூடாரமாக மாறியிருந்தது.

மேலும் அரிசி, மண்ணெண்ணெய் கடத்தலில் பயன் படுத்தும் வாகனங்கள் இந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

இது சம்பந்தமாக 19.5.2026 அன்று தீக்கதிரில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து புதர்கள் அகற்றப் பட்டன.

இது குறித்து இந்த வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி கூறுகையில், குழித்துறை பெரும் தெரு பகுதியில் செயல் பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது நவீன வசதிகளுடன் குழித்துறை தாலுகா வளாகத்துக்குள் இரண்டு மாதங்க ளுக்கு முன்னால் அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது .

தற்போது புதர்கள் நிறைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்த லில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் இதன் அருகாமையில் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுச் சுவர் கட்டப்படாததால் சமூக விரோ திகள் மதுபான பாட்டில்களை வளாகத்து க்குள் வீசுகின்றனர்.

உடனடியாக சுற்றுச் சுவர் கட்டப்பட வேண்டும்

. இது சம்பந்தமாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசென்ற போதும் எந்த நடவடிக்கையும் இல்லை .தற்போது நகராட்சி ஊழியர்களால் புதர்கள் அகற்றப் பட்டன.

உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.