தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேரூராட்சி கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

11 Aug 2026, 10:10 pm
பேரூராட்சி கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

பேரூராட்சி கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

தென்காசி, ஆக.11 -தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் மொத்தக் கழிவுகளும் அனுமன் நதி ஆற்றுப் பகுதியில் கொட்டப்படுவதாக சிபிஎம் குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து தென்காசி வட்டார சிபிஎம் செயலாளர் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனுமன் நதி ஆற்றுப் பகுதியில் கழிவுகள்கொட்டப்படும் பகுதியைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் அமைந்துள்ளதுடன், கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டம், சுடுகாடு ஆகியவையும் அமைந்துள்ளன. இப்பகுதியில் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்படுவதால், அவை தீ வைத்து எரிக்கப்படுவதாகவும், இதனால் எப்போதும்புகை மண்டலமாக காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். புகை மற்றும் துர்நாற்றம் காரணமாகஅருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், நிலத்தடி நீர்மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. நோய் தொற்று ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே, அனுமன் நதி பகுதியில் பேரூராட்சி கழிவுகளை கொட்டுவதையும், அவற்றை தீ வைத்து எரிப்பதையும்தடுத்து, குப்பைகளை முறையாக சேகரித்து அறிவியல் முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,சம்பந்தப்பட்ட இடத்தை மாவட்ட நிர்வாகம் மற்றும்மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.