சாணார்பட்டியில் சிபிஎம் ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா
20 Jul 2026, 10:16 pm
<p><strong>சாணார்பட்டியில் சிபிஎம் ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா</strong></p><p>நத்தம், ஜூலை 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாணார்பட்டி ஒன்றியக்குழு அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா சாணார்பட்டி யில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எஸ்.வெள்ளைக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட் டக்குழு உறுப்பினர் பாப் பாத்தி வரவேற்றார். கட்சி யின் மத்தியக்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், என்.பாண்டி, திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ராணி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.முத்துச்சாமி, பி. வசந்தாமணி, தா.அஜாய் கோஷ், கே.ஆர்.பாலாஜி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் என். பெருமாள், எம். சின்னக்கருப்பன், பாக்கி யம், நத்தம் ஒன்றியச் செய லாளர் பொன். குழந்தை வேல், திண்டுக்கல் மாநகரச் செயலாளர் ஏ.அரபுமுகமது, திண்டுக்கல் ஒன்றியச் செய லாளர் ஆர்.சரத்குமார், வேட சந்தூர் ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் பி. ஸ்டாலின், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், சிலம்பரசன், செல்வம், கஸ் பார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இறுதியில் ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கே. ராஜா நன்றி தெரிவித்தார்.</p>
