பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னுள்ள காரணிகள் குறித்து சிபிஎம் ஆராயும்! அரசியல் தலைமைக்குழு அறிக்கை
14 Nov 2025, 1:26 pm
<p><strong>பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னுள்ள காரணிகள் குறித்து சிபிஎம் ஆராயும்! அரசியல் தலைமைக்குழு அறிக்கை</strong></p>
<p>புதுதில்லி, நவ. 14 - பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணிகள் குறித்து ஆராயப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மகாகத்பந்தன் கூட்டணிக்கு ஒரு பின்னடை வாகும். ஆளும் கூட்டணி அரசு இயந்தி ரத்தை முழுமையாகப் பயன்படுத்தியும், பல்வேறு தில்லு-முல்லுகளை மேற்கொண் டும், பெரும் தொகையை வாரி இறைத்தும் இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட அதன் தலைவர்களின் மதவெறி, சாதி வெறிப் பேச்சுகளும், கார்ப்பரேட் ஊடகங்கள் அவற்றை ஊதிப் பெருக்கிக் காட்டியதும், மகாகத்பந்தன் கூட்டணி எழுப்பிய மக்கள் பிரச்சனைகளை மூழ்கடித்து விட்டது. பாஜக-வை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் இன்னும் ஒன்றுபட்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ப தை பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த முடிவுகளுக்குப் பின்னால் உள்ள பிற காரணிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரிவாக ஆராய்ந்திடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கும், பிற எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த பீகார் மக்களுக்கு அரசியல் தலைமைக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்டவர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் மக்களுக்கு உறுதியளிக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (ந.நி.) </p>
