தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அண்ணல் அம்பேத்கர் சிலையை திறக்க வேண்டும் சிபிஎம், ததீஒமு காவல் கண்காணிப்பாளரிடம் முறையீடு

13 Jul 2026, 10:25 pm
அண்ணல் அம்பேத்கர் சிலையை திறக்க வேண்டும் சிபிஎம், ததீஒமு காவல் கண்காணிப்பாளரிடம் முறையீடு
<p><strong>அண்ணல் அம்பேத்கர் சிலையை திறக்க வேண்டும் சிபிஎம், ததீஒமு காவல் கண்காணிப்பாளரிடம் முறையீடு</strong></p><p>சேலம், ஜூலை 13- கெங்கவல்லியில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற் றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினர் காவல் கண்காணிப்பாளரி டம் முறையிட்டனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணல் அம்பேத்கார் சிலை அமைக்கப்பட்டது. சிலை கால் மேல் கால்போட்டு அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள் ளது என்ற காரணத்தினால் அன்று முதல் சிலை திறக்கப்படாமல் இருந் தது. இந்நிலையில், கடந்த 11.07.2026 ஆம் தேதியன்று சிலை திறந்தபோது, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க, பட்டியலின மக்கள் அச்சிலையை திறக்க வேண்டுமென்று வற்புறுத்த, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற் பட்டு அசாதாரணமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட அரசு அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும்போது, அசம்பாவிதம் ஏற் பட்டு தடியடி நடத்தப்பட்டு சில ருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். இந்நிலையில் பட்டியலின மக் களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அம் பேத்கார் சிலையும் தடுப்புகளால் மூடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒதியத்தூர் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் அச்சத்துடனும், அதில் சிலர் தலைமறைவாகவும் இருந்து வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அசாதாரண சூழ் நிலையைப் போக்கி, அண்ணல் அம்பேத்கார் சிலையை திறந்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட் டுள்ள பட்டியலின மக்களை உடன டியாக விடுதலை செய்வதோடு, மேற்கொண்டு யார் மீதும் வழக்கு பதிவோ, கைது நடவடிக்கையோ எடுக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என சிபிஎம் மற் றும் ததீஒமு சார்பில் திங்களன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் காவல் கண் காணிப்பாளர் எஸ். குத்தாலிங்கமி டம் முறையீடு கடிதத்தை அளித்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகு தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.கனகராஜ், என்.பிரவீன் குமார், ஏ.கலியபெரு மாள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர். குழந்தைவேல், பொருளாளர் ராம சாமி, சிபிஎம் கெங்கவல்லி ஒன்றியச் செயலாளர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் நேரில் சென்று உண்மைத்தன்மை அறிந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.