12 மாநகராட்சிகளின் தூய்மைப் பணி தனியார்மய முடிவைக் கைவிடுக!
yesterday

12 மாநகராட்சிகளின் தூய்மைப் பணி தனியார்மய முடிவைக் கைவிடுக!

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

சென்னை, ஜூன் 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம், சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜூன் 22) அன்று நடைபெற்றது.

மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், என். குணசேகரன் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தனியார்மய முயற்சிகளில் தீவிரமான நடவடிக்கை இது!

தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிப் பகுதி களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க ஆய்வு செய்வதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரியிருக்கிறது. இது தனியார்மயத்தை நோக்கிய முதல் படியாகும். தூய்மைப்பணி தனியார்மய முயற்சிகளில் இதுவே தீவிரமான நடவடிக்கையாகும்.

அவ்வப்போது தனியார்மய முயற்சி களை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்வ தும், ஊழியர்கள் போராடி தடுப்பதும், தள்ளிப்போடுவதும் கடந்த கால அனுபவங்களாக இருந்திருக்கின்றன. தொழிலாளிகள் ஓய்வு பெற்றால் அந்த இடங்களை வெளிமுகமை வைத்து நிரப்பு வது என்று அரசாணை வெளியிடப்பட்டு, மாநகராட்சியின் சில வார்டுகள், மண்ட லங்களில் தனியார்மயம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த தவெக!

ஆனால், 12 மாநகராட்சி தூய்மைப் பணிகளையும் ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்கும் செயலாக தற்போது முயற்சி உள்ளது. தேர்தலுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி தூய்மைப்பணி தொழிலாளர்கள் போராடும் போது தவெக அதை ஆதரித்திருக்கிறது.

இந்தப் பின்னணியில், இந்த தனியார் மய முயற்சி முற்றிலும் நியாயமற்றதாகும். ஏழை மற்றும் அடிமட்ட குடும்பங்கள் நிரந்தர வருவாய் ஈட்ட ஈடுபடும் இந்தத் தொழிலை தனியார்மயமாக்குவது பொருத்தமற்றது.

எனவே, தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது.