சிபிஎம் திருப்பூர் 2, 3ஆவது மண்டல கமிட்டிகள் உதயம்
29 Sept 2026, 1:50 am

சிபிஎம் திருப்பூர் 2, 3ஆவது மண்டல கமிட்டிகள் உதயம்

திருப்பூர், செப். 28 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர இரண்டு மற்றும் மூன்றாவது மண்டல கமிட்டிகள் ஞாயிறன்று அமைக்கப்பட்டன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர, ஒன்றிய இடைக்குழுக்கள், மாநகராட்சி பகுதிக்கு ஏற்ப மண்டல கமிட்டிகளாக மாற்றி அமைக்கப்பட்டன. இதன் படி திருப்பூர் முதலாவது மண்டலம் கிழக்கு, முதலாவது மண்டலம் மேற்கு, இரண்டாவதுமண்டலம், மூன்றாவது மண்டலம், நான்காவது மண்டலம் மற்றும் திருப்பூர் ஒன்றியம் என ஆறு இடைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது மண்டலக் கமிட்டிமார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர இரண்டாவது மண்டல கமிட்டி சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிறன்று பூலுவபட்டி பிரிவு தனியார் மண்டபத்தில் முன்னாள் வடக்கு ஒன்றியச்

செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தொடக்கி வைத்துப் பேசினார். பா.சௌந்தரராசன், ஆர்.மைதிலி, ஆ.சிகாமணி, பி.மனோகரன், என்.இளங்கோ, ஆர்.நந்தகோபால், ஈ.வளர்மதி, பொன் பாலகுமாரன், மகாலிங்கம், பாண்டியன், தமிழ்வாணன், மங்கலட்சுமி, சி.பானுமதி, தனராஜ், மகேஸ்வரன் ஆகிய 15 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. இரண்டாவது மண்டலக்கமிட்டி செயலாளராக பா.சௌந்தரராசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பவித்ரா தேவி நிறைவுரை ஆற்றினார்.

மூன்றாவது மண்டலக் கமிட்டிதிருப்பூர் மாநகர மூன்றாவது மண்டலக் கமிட்டி சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிறன்று ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள தனியார்மண்டபத்தில் மூத்த உறுப்பினர் டி.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இடைக்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் துவக்கவுரை ஆற்றினார். இதில் த.ஜெயபால், பி.செல்லதுரை, ஏ.ஷகிலா, ஜி.செந்தில்குமார், எஸ்.பொன்ராம், எம்.மகேஷ், எஸ்.ஜானகி, ஏ.செல்வன், செல்லமுத்து, திருப்பதி, கல்கிராஜ், ஏ.ரமேஷ், ஆறுக்குட்டி ஆகிய 13 பேர் கொண்ட மாநகர மூன்றாவது மண்டல கமிட்டி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது. இதன் செயலாளராக டி.ஜெயபால் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி புதிய மண்டலக் குழுவை அறிமுகம் செய்து வைத்து நிறைவுரை ஆற்றினார்.