தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் அண்ணாதுரை குடும்ப உதவி நிதி சிபிஎம் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் வழங்கப்பட்டது

2 Nov 2026, 11:09 pm
தோழர் அண்ணாதுரை குடும்ப உதவி நிதி  சிபிஎம் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் வழங்கப்பட்டது

தோழர் அண்ணாதுரை குடும்ப உதவி நிதி சிபிஎம் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் வழங்கப்பட்டது

திருப்பூர், நவ.2 -திருச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாகன ஓட்டுநராக சுமார் 30 ஆண்டு காலம் பணியாற்றி, திடீர் மரணமடைந்த தோழர் அண்ணாதுரையின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் ரூ.2.50 லட்சம் குடும்ப உதவி நிதி அளிக்கப்பட்டது.

திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் திங்களன்று மாலை நடைபெற்ற இந்த குடும்ப உதவி நிதி அளிக்கும் நிகழ்ச்சிக்கு கட்சியின் இரண்டாவது மண்டலச் செயலாளர் பா.சௌந்தரராசன் தலைமை ஏற்றார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் அண்ணாதுரையின் பணிகள், அவரது அர்ப்பணிப்பான கட்சி உணர்வு குறித்து உரையாற்றினர்.

நிறைவாக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், அண்ணாதுரையின் இணையர் அழகுமணி பெயரில் வைப்புத் தொகையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார். அண்ணாதுரையின் மகன்கள் மனோஜ்குமார், பொன்னுசாமி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் திருச்சியில் இருந்து வந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் பெருந்திரளானோர் இந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வில் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.