தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் தேனி மாவட்ட மூத்த தலைவர் தோழர் வி.என். ராமராஜ் காலமானார்!

22 Nov 2025, 4:09 pm
சிபிஎம் தேனி மாவட்ட மூத்த தலைவர் தோழர் வி.என். ராமராஜ் காலமானார்!
<p><strong>சிபிஎம் தேனி மாவட்ட மூத்த தலைவர் தோழர் வி.என். ராமராஜ் காலமானார்!</strong></p> <p>தேனி, நவ. 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் வி. என். ராமராஜ் சனிக்கிழமை அதிகாலை கால மானார். அவருக்கு வயது 85. 58 ஆண்டுகளுக்கும் மேலான அரசி யல் பொதுவாழ்வைக் கொண்ட தோழர் வி.என். ராமராஜ், தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப &nbsp;காலத் தலைவர்களான ஏ. அப்துல் வஹாப், உசேன் மீர், எஸ்.ஏ. ரஜாக், கே. &nbsp;ராஜப்பன், ஏ. லாசர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியவர். கட்சியின் &nbsp;தேனி தாலுகா செயலாளர், மாவட்டக் குழு உறுப்பினர், தேனி அல்லிநகரம் நகராட்சி மன்ற உறுப்பினர், கரும்பு விவ சாயிகள் சங்க தேனி மாவட்டச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். போராட்டங்களுக்கு தலைமையேற்று சிறைசென்ற தலைவர்! மக்கள் பிரச்சனைக்கான பல்வேறு போராட்ட ங்களுக்கு தலைமை யேற்று சிறை சென்றவர். அவற்றில் ரேணுகா மில் தொழிலாளர்க் கான மாபெரும் போராட்டம் குறிப் பிடத்தக்கதாகும். மில் நிர்வாகத்தி னர் பல்வேறு வகைகளில் மிரட்டல் விடுத்த தோடு, தோழர் ராமராஜின் மோட்டார் பம்பு செட், தோட்டத்தை நாச மாக்கினர். குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். எனினும், உறுதியுடன் போராடி தொழிலாளர் களுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர். &nbsp;அனைத்துப் பகுதி மக்களின் அன்பையும், மதிப்பையும் பெற்ற தோ ழர் வி.என். ராமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாபெரும் தலைவர் தோழர் &nbsp;சீத்தாராம் யெச்சூரியின் நினைவு நாளை &nbsp;முன்னிட்டு, ஆயிரக்கணக்கான தோழர் களோடு தோழராக தானும் உடல் தானம் &nbsp;செய்திருந்தார். &nbsp;இந்நிலையில், சனிக்கிழமையன்று அதிகாலை அவர் காலமானார். தலைவர்கள் அஞ்சலி அவரது உடலுக்கு, கட்சியின் மாநிலக் குழு சார்பில் பெரியகுளம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. &nbsp;லாசர், மாவட்டச் செயலாளர் எம். இராமச் சந்திரன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து கட்சியின் தேனி &nbsp;தாலுகா செயலாளர் இ. தர்மர் தலை மையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் &nbsp;மூத்த தலைவர் கே. ராஜப்பன், முன்னாள் &nbsp;மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணா மலை, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி. வெங்கடேசன், ஜி.எம். நாகரா ஜன், &nbsp;டி. கண்ணன் கே.எஸ். ஆறுமுகம், &nbsp;சு. வெண்மணி, வி.தொ.ச. மாவட்டச் செய லாளர் எல்.ஆர். சங்கர சுப்பு, சிஐடியு தலை வர் முருகன், இடைக்கமிட்டி செயலா ளர்கள் சி. முனீஸ்வரன், கே.ஆர். லெனின், &nbsp;பி. ஜெயராஜ், டி.கே. சீனிவாசன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி. ஜெயபாண்டி, மாவட்டச் செயலாளர் ஜி. சண்முகம், மாதர் &nbsp;சங்க மாவட்டச் செயலாளர் சத்யா, வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் டி. நாகராஜ், &nbsp;விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே. பாண்டியன், தமுஎகச மாவட்டச் செயலாளர் ம. காமுத்துரை, ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் பா. ராம மூர்த்தி, சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் பி. &nbsp;மணவாளன் மற்றும் ஏ.பி. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடல் தானம் அதைத்தொடர்ந்து, தோழர் வி.என். &nbsp;ராமராஜ் விருப்பப்படி, அவரது உடல் தலை வர்கள் - உறவினர்களின் இறுதி அஞ்சலிக் குப் பின், மருத்துவ மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிடம் ஒப்படைக் கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.