ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சிபிஎம் நன்றி
5 Mar 2026, 3:59 pm
<p><strong>ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சிபிஎம் நன்றி</strong></p>
<p>பெரம்பலூர், மார்ச் 5- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், பாடலூர் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் மரணமடைந்தனர். இந்த உயிரிழப்பிற்கு, அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளைக் கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்கமல் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் பிப்.28 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தாகவும், அதன் அடிப்படையில் ஆலத்தூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவி டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கொடுத்த வாக்குறுதியின் படி குற்றவாளிகள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஊராட்சியில் அனுமதி பெறமால் கட்டிய கட்டிடத்தை தடை செய்து நோட்டீஸ் வழங்கி தடை செய்யப்பட்ட பகுதி என விளம்பர பலகை வைத்துள்ளனர். நியாயமான கோரிக்கை களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பா ளருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.</p>
