முந்தய பக்கம்

சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு

29 Jun 2026, 8:43 pm
சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு
<p><strong>சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு</strong></p><p>புதுதில்லி மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகளுக்குப் பொறுப் பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நேரடியாக ஆதரவுடன் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ்சோனம் வாங்சுக் ஞாயிறன்று தனது காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார். </p><p>இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளது. சிபிஎம் பொதுச் செய லாளர் எம்.ஏ.பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத் ஆகியோர் சோனம் வாங்சுக் உண்ணா விரதப் போராட்டம் நடத்தும் களமான தில்லி ஜந்தர் மந்தருக்கு நேரில் சென்று ஆதரவை வழங்கி, “உங்களுடன் இருப்போம்” என ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் போராட்ட மேடையிலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே உடனும் சிபிஎம் தலைவர்கள் உரை யாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram