தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை திராவிடர் கழகம் நாளை நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் பங்கேற்பு!

14 May 2026, 9:35 pm
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை திராவிடர் கழகம் நாளை நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் பங்கேற்பு!

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை திராவிடர் கழகம் நாளை நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் பங்கேற்பு!

சென்னை, மே 14 - ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலி யுறுத்தி, திராவிடர் கழகம், சனிக்கிழமை (மே 16) நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கி றது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஏழை, எளிய, மாணவர்களின் மருத்து வக் கனவை சிதைக்கும் ‘நீட்’ தேர்வை தமிழகத்தில் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

நீட் தேர்வில் மிகப்பெரிய மோசடி!

அண்மையில் கூட இத்தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று பல லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். நீட் தேர்வை நாடு முழுவதும் ரத்து செய்ய வேண்டும், மருத்துவ படிப்புக்கான தேர்வுமுறையை முன்புபோல் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமே ஒப்படைக்க வேண்டும் என வலுவான குரல்கள் எழுந்து வருகின்றன.

முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!

இந்நிலையில், நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் 16.05.2026 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரவு தெரிவிப்பதுடன், மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், தோழர்கள் கலந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.