தில்லி குடிசைப்பகுதி மக்களுக்கு ஆதரவாக சிபிஎம்
3 Jun 2026, 8:37 pm
<p><strong>தில்லி குடிசைப்பகுதி மக்களுக்கு ஆதரவாக சிபிஎம்</strong></p><p>தில்லி ஜிம்கானா கிளப் மைதானத்தை அரசு கையகப்படுத்தியது. அது குறித்து ஊடகங்கள் அதிகம் பேசி வருகின்றன. ஆனால், அதற்கு அருகில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான உழைக்கும் வர்க்கக் குடும்பங்களை வெளியேற்ற நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான செய்திகள் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அம்மக்களுக்கு ஆதரவாக தில்லி சிபிஐ(எம்) தலைவர்கள் ஆஷா சர்மா, அமன் சைனி, வீரேந்தர் கவுர் மற்றும் பலர் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அருகிலுள்ள பகுதிகளிலேயே தங்களுக்கு மாற்று இடம் (மறுவாழ்வு) வழங்க வேண்டும் என்ற அம்மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி பேசி வருகின்றனர்.</p>
