தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வக்ப் வாரியத்தில் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கடும் கண்டனம்

6 Mar 2026, 3:17 pm
வக்ப் வாரியத்தில் ஆர்எஸ்எஸ் ஊடுருவல்  புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கடும் கண்டனம்
<p><strong>வக்ப் வாரியத்தில் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் &nbsp;புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கடும் கண்டனம்</strong></p> <p>புதுச்சேரி, மார்ச் 6- வக்ப் வாரியத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் மற்றும் புதுச்சேரி அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் கடந்த 11 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த வக்ப் வாரியத்தை, தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக அவசர அவசரமாக அமைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் நடவடிக்கையை &nbsp;சிபிஎம் வன்மையாகக் கண்டிக்கிறது. குறிப்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாறாக, துணை நிலை ஆளுநரின் நேரடித் தலையீட்டின் மூலம் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஜனநாயகப் படுகொலையாகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது புதுச்சேரி அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. கேரளாவில் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு சமீபத்தில் வாரியத்தை மறுசீரமைத்தபோது, இஸ்லாமியர் அல்லாத எவரையும் நியமிக்காமல் அந்தச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாத்துள்ளது. தமிழக அரசும் வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்கவில்லை. உ.பி., குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில்கூட பழைய வாரியங்களே தொடர்கின்றன. குறிப்பாக, குஜராத் மாநில வக்ப் வாரிய உறுப்பினர்கள் பட்டியலில் அனைவரும் இஸ்லாமியர்களாகவே உள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களே செய்யத் துணியாத இந்தச் செயலை, புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ்-ன் பரிசோதனை முயற்சியாக பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு முன்னெடுத்துள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது. வக்ப் திருத்தச் சட்டம் 2025 அரசியலமைப்புக்கு எதிரானது என எங்கள் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு, அதில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. &ldquo;சட்டம் உறுதி செய்யப்படாத நிலையில், அதனை நாடு முழுவதும் அமல்படுத்தக் கூடாது&rdquo; என ஜனநாயக சக்திகள் போராடி வரும் நிலையில், புதுச்சேரி அரசு தன்னிச்சையாக இந்த நியமனங்களைச் செய்திருப்பது மதவாத நிகழ்ச்சி நிரலின் பகுதியாகும். இஸ்லாமிய அறக்கட்டளைச் சொத்துகளைப் பாதுகாக்கும் வாரியத்தில், அந்தச் சமூகத்திற்கு எதிராகச் செயல்படும் சித்தாந்தம் கொண்டவர்களை அமர்த்துவது வக்ப் வாரியத்தின் தன்னாட்சியைக் குலைக்கும் முயற்சியாகும். எனவே, ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கேரளாவைப் பின்பற்றி இஸ்லாமியச் சமூகத்தின் பிரதிநிதிகளைக் கொண்டு மட்டுமே வாரியத்தை மறுசீரமைக்க வேண்டும். புதுச்சேரியின் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க நினைக்கும் இந்த அரசின் போக்கைக் கண்டித்து, சிபிஐ(எம்) புதுச்சேரி மாநிலக் குழு சார்பில் மிகத்தீவிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.