தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக வேட்பாளர் வசந்தவேலையை ஆதரித்து சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

11 Apr 2026, 5:30 am
திமுக வேட்பாளர் வசந்தவேலையை ஆதரித்து சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

திமுக வேட்பாளர் வசந்தவேலையை ஆதரித்து சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி, ஏப்.10- தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மத நல்லிணக்கம் தழைத்தோங்கவும் உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.ஜே. வசந்தவேலுவுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை நகரில் திருவெண்ணெய்நல்லூர் சாலையில் தொடங்கிய இந்தப் பிரச்சாரம், அண்ணா நகர், குமரன் தெரு மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகத் தொடர்ந்தது. அப்போது 'கலை குறிஞ்சி கலைக்குழு' சார்பாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக-பாமக உள்ளிட்ட கட்சிகளின் 'எட்டடி' கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பி. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஆனந்தன், வி. சாமிநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. சேகர், ஏ. தேவி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.