சாகித்ய அகாடமி விருதில் ஒன்றி அரசின் தலையீட்டிற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கடும் கண்டனம்!
19 Dec 2025, 10:37 am
<p>சாகித்ய அகாடமி விருதில் ஒன்றிய அரசு தலையிட்டு அதை நிறுத்திவைத்ததற்கு சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.<br />
இதுகுறித்து; சாகித்ய அகாடமி அமைப்பையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடிக்கிறது மோடி ஆட்சி. பா.ஜ.க ஆட்சியில் இனி சாகித்ய அகாடமி விருது சனாதனத்தை ஆதரிப்பவர்களுக்கும், ஆட்சிக்கு 'ஜால்ரா' போடுபவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும்.<br />
இலக்கியம், வரலாறு, அதன் தரம் போன்றவை ஒரு பொருட்டல்ல! அனைத்தையும் அழிப்போம் என்பதுதான் அவர்களின் அரசியல். என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.<br />
</p>
