திருவண்ணாமலை மூத்த தோழர் ஏ. நடராசன் மறைவு சிபிஎம் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கல்
22 Feb 2026, 3:26 pm
<p><strong>திருவண்ணாமலை மூத்த தோழர் ஏ. நடராசன் மறைவு சிபிஎம் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கல்</strong></p>
<p>சென்னை, பிப். 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவண்ணாமலை மாவட்டக் குழுவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சித் தோழர் களால் ‘புரட்சி நடராசன்’ என்று அன்போடு அழைக்கப்படுபவரு மான தோழர் ஏ. நடராசன் (வயது 85) அவர்கள், ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: அர்ப்பணிப்பு மிக்க போராட்ட வாழ்க்கை தோழர் ஏ. நடராசன் அவர்கள் திரு வண்ணாமலை மாவட்டத்தில் மின்வாரி யத் தொழிலாளராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே கட்சியைப் பலப் படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றியவர். ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினராகவும், தொழிற் சங்கத் தலைவராகவும் அர்ப்பணிப்போடு செயல்பட்டவர். நெருக்கடி நிலை காலத்தின் போது, கடும் அடக்குமுறை களுக்கு அஞ்சாமல் மின்சார வாரிய அலுவலகத்தில் சிஐடியு கொடியைத் துணிச்சலோடு ஏற்றிய வீரவரலாற்றுக்குச் சொந்தக்காரர். மக்கள் பணிகளில் முன்னோடி பஞ்சமி நில மீட்புப் போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம் எனச் சமூக நீதிக்கான களங்களில் முன்னின்றவர். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழி லாளர்களின் நலன்களைப் பாதுகாக்க வும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களுக்காகவும் ஏராளமான போராட்டங் களைத் தலைமையேற்று நடத்தியவர். விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர், கட்சியின் மாவட்டக்குழு மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்தவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைக்கும் வர்க்க இயக்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். தோழர் ஏ. நடராசன் அவர்களின் மறை வால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தின ருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் திரு வண்ணாமலை மாவட்டத் தோழர் களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறது.</p>
