முந்தய பக்கம்

சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் சுதந்திர தின விழா!

16 Aug 2026, 9:12 pm
சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் சுதந்திர தின விழா!
<p><strong>சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் சுதந்திர தின விழா!</strong></p><p>சென்னை, ஆக.16 -நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில் சுதந்திர தினக் கொடியை கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்து உரையாற்றினார். கட்சியின் செங்கொடியை மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் ஏற்றி வைத்தார். </p><p>இந்நிகழ்வில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன், ஜி. செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் பா. ஜான்சிராணி, வெ.ராஜசேகரன், தோ.வில்சன், இரா.சிந்தன், க.சரவணன் மற்றும் மாநிலக்குழு அலுவலக கிளை உறுப்பினர்கள், சமூக ஊடக கிளை உறுப்பினர்கள், தென் சென்னை, மத்திய சென்னை மாவட்ட உறுப்பினர்கள், மாற்றுத் திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நீலகண்டன் தலைமையிலான இசைக் குழுவினர் சுதந்திர தின பாடல்களை பாடினர். </p>
Share
FacebookXWhatsAppTelegram