முந்தய பக்கம்

சிபிஎம் சிறப்புப் பேரவை

16 Jun 2026, 11:01 pm
சிபிஎம் சிறப்புப் பேரவை
<p><strong>சிபிஎம் சிறப்புப் பேரவை</strong></p><p>நாகப்பட்டினம், ஜுன்16- தமிழக அரசியல் சூழலும், நமது அணுகுமுறையும் என்ற தலைப்பில் கட்சி உறுப்பினர்களுக்கான விளக்கப் பேரவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மாவட்டக் குழு சார்பில், கீழ்வேளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கட்சி மாநிலக்குழு உறுப்பி னருமான நாகைமாலி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்றத் தேர்தலில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விளக்கவு ரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் கட்சி ஊழியர்கள் பங்களிப்பு குறித்து விவரித்ததோடு, தீக்கதிர் விற்பனையை உயர்த்த வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன், நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்தும், தமிழ்நாடு தேர்தல் முடிவு களுக்குப் பின்னர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தர வேண்டிய சூழல் ஏற்பட்டது குறித்தும், எத்த கைய சூழலிலும் கட்சியின் சுயேட்சையான செயல்பாடுகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதையும் எடுத்துரைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram