முந்தய பக்கம்

ஆந்திர அரசு கார்ப்பரேட் நலனுக்கே முன்னுரிமை அளிக்கிறது சிபிஎம் கடும் கண்டனம்

7 Jun 2026, 9:44 pm
ஆந்திர அரசு கார்ப்பரேட் நலனுக்கே முன்னுரிமை அளிக்கிறது சிபிஎம் கடும் கண்டனம்
<p><strong>ஆந்திர அரசு கார்ப்பரேட் நலனுக்கே முன்னுரிமை அளிக்கிறது சிபிஎம் கடும் கண்டனம்</strong> </p><p>ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கட்சி களின் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்சராக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார். இந்நிலையில், ஆந்திர அரசு கார்ப்ப ரேட் நலனுக்கே முன்னுரிமை அளிக்கி றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் வி.சீனிவாச ராவ் கூறுகையில், “தெலு ங்கு தேசம் கட்சித் தலைமையிலான ஆந்திர தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தனது முதல் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் முக்கியத் தேர்தல் வாக்கு றுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. குறிப்பாக பொதுமக்களின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. தங்களது “சூப்பர் சிக்ஸ்” திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகளை இன்னும் செயல்படுத்தவில்லை. அதைப் பற்றி பேசவும் மறுக்கிறார்கள்” என அவர் குற் றம்சாட்டியுள்ளார். </p>
Share
FacebookXWhatsAppTelegram