விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஆந்திர பாஜக கூட்டணி அரசு முழுமையாக மறந்துவிட்டது மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
14 Jun 2026, 9:27 pm

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஆந்திர பாஜக கூட்டணி அரசு முழுமையாக மறந்துவிட்டது மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

ஆந்திரப் பிரதேச தேசிய ஜனநாய கக் கூட்டணி அரசு, ஸ்ரீகாகுளம் மாவட்ட விவசாயிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முழு மையாக மறந்துவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள் ளது.

ஸ்ரீகாகுளத்தில் ஞாயிறன்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி. துளசி தாஸ், மாவட்டச் செயலாளர் டி.கோவிந்த ராவ் ஆகியோர் மேலும் பேசுகையில், “ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நீண்ட நாட்க ளாக நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் மாநில அரசு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும்.

வம்சதாரா திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகள், நாகாவலி மற்றும் வம்ச தாரா ஆறுகளை இணைக்கும் திட்டம் அனைத்து மண்டலங்களிலும் உள்ள கிளைக் கால்வாய் வலையமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

வம்சதாரா ஆற் றின் நீரை முழுமையாகப் பயன்படுத்துவ தற்கும், கொட்டா பேரேஜை நவீனப் படுத்துவதற்கும், ஏந்துநீர்ப் பாசனத் திட் டங்களுக்கும் சுமார் ரூ.1,700 கோடி நிதி தேவைப்படுகிறது.

ஆனால் இதுதொடர் பாக எந்த அறிவிப்பும் இல்லை. குறிப்பாக, ஸ்ரீகாகுளம் மாவட்ட முந் திரி விவசாயிகளின் நலன்களைப் பாது காக்கத் தனியாக ஒரு முந்திரி வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

அதே போல மாவட்டத்திலுள்ள பழங்குடியின மக்க ளின் நலனுக்காக புதிய ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமை உரு வாக்கப்பட வேண்டும்.

உத்தனம் பிராந்தி யத்தில் முன்மொழியப்பட்டுள்ள சரக்கு விமான நிலையம் திட்டத்திற்கும், ஸ்ரீகாகுளம் மாவட்டக் கடற்கரைப் பகுதி களில் அரிய வகை கனிமங்களைத் தோண்டி எடுக்கும் திட்டத்திற்கும் சிபிஎம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது” என்று கூறி னர்.

லக்னோ ராமர் கோவில் நன்கொடையை சாணத்தில் புதைத்து சூறையாடும் நிர்வாகம் மோடி திறந்து வைத்த அயோத்தி ராமர் கோவி லுக்கு திருப்பதி போன்று நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் காணிக்கைகளை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு உண்டியல்கள், நன்கொடை மையங்கள் மூலம் சேரும் பணத்தைக் கணக்கிடும் மிக முக்கியப் பொறுப்பில் லவ்குஷ் மிஸ்ரா என்ற ஊழியர் நிய மிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் கோவில் கணக்குகளில், உண்டியல் வசூலில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் லவ்குஷ் மிஸ்ராவின் வீட்டை காவல் துறையினர் ஞாயிறன்று சோதனை செய்த னர். வீட்டின் பல இடங்களில் தேடியும் ஆரம்பத்தில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை.

இருப்பினும் வீட்டின் பின்புறம் தொழு வப் பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு குவித்து வைக்கப்பட்டி ருந்த மாட்டுச் சாணத்தின் அடியில் உள்ள ஒரு மூட்டையில் ரூ.12 லட்சம் இருப்பது தெரியவந்தது. லவ்குஷ் மிஸ்ராவைக் கைது செய்தனர்.

இந்தத் திருட்டுச் சம்ப வத்தில் லவ்குஷ் மிஸ்ராவுக்கு மட்டுமே தொடர்பு உள்ளதா அல்லது கோவிலைச் சேர்ந்த வேறு சில உயரதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பங்கிருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.