பால்கிணற்றான்விளை சாலையை சீரமைக்கக் கோரி சிபிஎம் கையெழுத்து இயக்கம்
19 May 2026, 10:04 pm
<p><strong>பால்கிணற்றான்விளை சாலையை சீரமைக்கக் கோரி சிபிஎம் கையெழுத்து இயக்கம்</strong></p><p>நாகர்கோவில்,மே 19- பால்கிணற்றான்விளை சாலையை சீர மைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுமக்களிடம் கையெ ழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. குமரி மாவட்டம், தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பால்கிணற்றான்விளை ஊரில் குண்டும் குழியுமாக சாலை சேதமடைந் துள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்ற னர். எனவே சாலையை உடனடியாக சீர மைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. எஸ். தாமோதரன் தலைமை தாங்கினார். பால்கிணற்றான் விளை செயலாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.எஸ்.கண்ணன், ஒன்றிய செய லாளர் எஸ்.ற்றி. ராஜ்குமார், கிளைச் செயலாளர் தங்கப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கையெழுத்தி ட்டு,கட்சியினரை பாராட்டினர்.</p>
