தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலையைக் குறைக்க மறுக்கும் மோடி அரசு திருவாரூரில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சாடல்!

19 Jun 2026, 9:46 pm
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல்  விலையைக் குறைக்க மறுக்கும் மோடி அரசு திருவாரூரில்  சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சாடல்!

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலையைக் குறைக்க மறுக்கும் மோடி அரசு திருவாரூரில்

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சாடல்!

ருவாரூர்/சென்னை, ஜூன் 19- சர்வதேசச் சந்தையில் கச்சா எண் ணெய் விலை கணிசமாகக் குறைந்த பிறகும், உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க மறுக்கும் ஒன்றிய மோடி அரசு, மக்கள் மீது அக்கறையற்ற ஒரு கார்ப்பரேட் சார்பு அரசாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண் முகம் கடுமையாகச் சாடினார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக் கைகளை வலியுறுத்தி, வெள்ளியன்று (ஜூன் 19) சிபிஎம் சார்பில் தமிழகம் முழு வதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விலை சரிவும் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சேவையும்

இதனொரு பகுதியாக, திருவாரூ ரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின் செய்தி யாளர்களைச் சந்தித்துப் பேசிய பெ. சண்முகம், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி உடன்படிக்கையின் காரண மாக உலகப் புகழ்பெற்ற ஹோர்முஸ் ஜலசந்தி தற்போது திறக்கப்பட்டுள்ள தைச் சுட்டிக்காட்டினார். இதன் நேரடி விளைவாக, சர்வதேச சந்தையில் பேரல் ஒன்றுக்கு 120 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய்யின் விலை, தற்போது 78 டாலராகக் குறைந்துள்ளது என்றார்.

சர்வதேச அளவில் விலை உயரும் போதெல்லாம் இந்திய உழைக்கும் மக்கள் மீது ஒரே இரவில் சுமையை ஏற்றும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது விலை குறைந்த பின்பும் பெட் ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்க மறுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்றார். ‘விலையை ஏற்றுவது மட்டுமே உடனடி யாகச் சாத்தியம், அதைக் குறைப்பது சாத்தியமில்லை’ என பெட்ரோலியத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி பேசு வது, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்க ளின் கொள்ளை லாபத்தைப் பாது காப்பதற்கே அன்றி வேறில்லை எனச் சாடினார். தற்போதைய பெட்ரோல், டீசல் விலையில் 50 சதவிகிதம் ஒன்றிய - மாநில அரசுகளின் வரியாகவே வசூ லிக்கப்படும் சூழலில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு வரி வருவாயிலிருந்து ஒரு பகுதியை அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

‘விபி ஜி ராம் ஜி’ திட்டமும் தொழிலாளர் சட்ட எதிர்ப்பும்

மேலும், கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, வேலை மற்றும் கூலிக்கு எவ்வித உத்தர வாதமும் இல்லாத ‘விபி ஜி ராம் ஜி’ என்ற புதிய மக்கள் விரோதத் திட்டத்தை வரும் ஜூலை 1 முதல் ஒன்றிய அரசு கொண்டு வருகிறது எனக் குறிப்பிட்ட பெ. சண்முகம், மாநில அரசுகள் 40 சத விகித நிதியை ஒதுக்கவில்லை என்றால் இத்திட்டம் முற்றிலும் முடங்கிவிடும் அபா யம் உள்ளதால், உழைப்பாளி மக்களுக்கு விரோதமான இந்த புதிய திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமை யாக எதிர்க்கிறது என்றார். அதேபோல, ஒன்றிய அரசின் தொழிலாளர் தொகுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தொழி லாளர் உரிமைகள் பாதிக்காத வகையில் அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர் களையும் அழைத்து விவாதித்த பிறகே விதிகளை உருவாக்க வேண்டும் என்ற ஜனநாயகப் பூர்வமான அணுகு முறையைத் தமிழக வெற்றிக் கழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்தி னார்.

மேகதாது அணை விவகாரமும் சட்டப்பேரவைத் தீர்மானமும்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் சட்டவிரோத நடவடிக்கையைக் கண்டித்து வெள்ளியன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட ஒருமனதான தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமை யாக வரவேற்கிறது என்ற அவர், தமிழ கத்தின் நெற்களஞ்சியமான டெல்டாவைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் சிபிஎம் எப்போதும் உற்ற துணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

ஏழை மக்கள் மீதான மோடி அரசின் கொடூரத் தாக்குதல்: கே.பாலகிருஷ்ணன்

​​​​​​​சென்னை பிராட்வேயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் ்தில் பங்கேற்ற சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மோடி அரசு தொடர்ந்து ஏழை, எளிய, உழைப்பாளி மக்கள் மீது கொடூரத் தாக்கு தலை நடத்தி வருகிறது எனக் குற்றம் சாட்டினார். ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலால் எண்ணெய்ப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதாக போலிக் காரணம் கூறி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 முறை பெட்ரோ லியப் பொருட்களின் விலையைப் பல மடங்கு உயர்த்தி யுள்ளனர் என்றார். இதனால் வணிக எரிவாயுவைக் கள்ள மார்க்கெட்டில்தான் பெற முடியும் என்ற மோசமான நிலை உருவாகி, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, இறக்கை கட்டிப் பறக்கிறது என வேதனை தெரி வித்தார்.

தற்போது அமெரிக்கா - ஈரான் இடையே சுமூக நிலை ஏற்பட்டுள்ளதால் உயர்த்தப்பட்ட விலைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வற்புறுத்திய அவர், கிராமப்புற மக்களின் வாழ்வாதா ரமாக உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து, அதன் முழுச் செலவையும் ஒன்றிய அரசே ஏற்க வேண்டும் என்ற வலுவான தீர்மானத்தை நிறைவேற்றி, முதலமைச்சர் விஜய், ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றார். அத்துடன் தினக்கூலியை 700 ரூபாயாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்த தைப் போல, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் தமிழ்நாட்டிலும் அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.