விழுப்புரம் : காவல்துறையின் தடையை மீறி சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திடீர் சாலை மறியல்!
24 Jul 2026, 9:43 pm

விழுப்புரம் : காவல்துறையின் தடையை மீறி சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திடீர் சாலை மறியல்!

விழுப்புரம், ஜூலை 24 - நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் நடத்த விருந்த காத்திருப்புப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துத் தலைவர்களைக் கைது செய்த காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை காத்திருப்புப் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், ஜனநாயக முறையிலான இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், மாநிலக் குழு உறுப்பினர் கீதா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமான தோழர்களைக் கைது செய்தது.

தகவலறிந்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கல்வராயன்மலை நிகழ்வை முடித்து விட்டு உடனடியாக விழுப்புரம் விரைந்தார்.

காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட அதே நகராட்சித் திடல் முன்பாக மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்களுடன் சாலையில் அமர்ந்து அவர் ஆவேசமான மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

“ஜனநாயக உரிமைகளை நசுக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கைச் சகிக்க முடியாது” என முழக்கமிட்டுத் தோழர்கள் வீதியை மறித்துப் போராடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

. தலைவர்களின் இந்த அதிரடிப் போராட்டத்தால் காவல்துறை திணறியது.

இந்நிலையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்த காவல்துறை, இரவு காத்திருப்புப் போராட்டத்திற்கும் அனுமதி வழங்கியது.