தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

20 ஆயிரம் குடும்பங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வரிடம் சிபிஎம் வலியுறுத்தல்!

15 Jul 2026, 1:03 pm
20 ஆயிரம் குடும்பங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வரிடம் சிபிஎம் வலியுறுத்தல்!

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து மக்கள் பிரச்சனைகள் தொடர்பான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

அப்போது, மாநிலம் முழுவதும் உள்ள இனாம் நிலங்களை மக்களுக்கு வழங்குவதற்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 90 கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும், நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல், சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகப் பணியை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.